நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்ற Kaalam பாடல் வெளியானது!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது!

Updated: Jul 9, 2019, 08:04 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்ற Kaalam பாடல் வெளியானது!
Screengrab

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடேசன், ஆண்ட்ரியா தைராங்க் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வித்யா பாலன் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார். அவர் இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

அண்மையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘வானில் இருள்’ லிரிக் வீடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ‘காலம் இடிஎம்’ சாங்க் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், நாகர்ஜூனா.ஆர் மற்றும் யொன்ஹோ ஆகியோர் வரிகளில் எழுதியுள்ள இந்த பாடலை அலிஷா தாமஸ் என்பவர் பாடியுள்ளார். அவருடன் இணைந்து யொன்ஹோவும் பாடியுள்ளார்.