வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குழந்தைகள் கள்ள கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் அப்பாவிகளாக செய்யும் சில செயல்கள் அனைவரது முகங்களிலும் சிரிப்பை வரவழைக்கின்றன. சில செயல்களோ நம்மை வயிற்றை பிடித்துக்கொண்டு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றன. குழந்தைகளின் பல வித வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
குழந்தைகள் தங்கள் அறியாமையால் செய்யும் பல விஷயங்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பது வழக்கம். சில சமயம் நடந்துகொண்டிருக்கும் சிறு குழந்தை பொம்மையை தூக்கி போடுவதும், திடீரென விசித்திரமான செயல்களை செய்வதும் வழக்கம். இவை நமக்கு வெடிக்கையான விஷயங்களாக இருப்பதுண்டு. குழந்தைகள் செய்யும் சில செயல்களே ஒரே நேரத்தில் அவர்களுக்கு அழுகையையும் நமக்கு சிரிப்பையும் வரவழைக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வின் வீடியோதான் சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கில்லாடி கிளிகள்... ஒலிம்பிக் போட்டிக்கு இவற்றை அனுப்பினால் பதக்கம் நிச்சயம்!
இந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சியளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதை காண முடிகின்றது. அப்போது அக்குழந்தை தன்னுடைய நிழலை காண்கிறது. அதை பார்த்த குழந்தை பயந்து விடுகிறது. நிழலை கண்ட குழந்தையால் அது என்ன என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதுவே அதன் அழுகைக்கு காரணமாக உள்ளது.
தன் நிழலை கண்டு அச்சப்பட்ட பெண் குழந்தை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு குழந்தை தனது நிழலை கண்டு பயப்படுவது போன்ற காட்சியை காண முடிகின்றது. குழந்தை ஒன்று நடந்துகொண்டிருக்கின்றது. அப்போது திடீரென அது தனது நிழலைப் பார்க்கிறது. குழந்தை கையை உயர்த்திய நிலையில், நிழலில் இருந்தும் அதே அசைவு ஏற்படுகின்றது. இதன் காரணமாக குழந்தை அச்சப்படத் தொடங்குகிறது. அந்தப் பெண் தன் நிழலைக் கண்டு பின்வாங்கத் தொடங்குகிறது.
ஆனால், குழந்தை என்ன செய்தாலும் அதே போன்ற அசைவு நிழலிலும் ஏற்படுவதை கண்டு குழந்தையின் அச்சம் இன்னும் அதிகமாகின்றது. அதன் பிறகு குழந்தை பயத்தில் கத்தத் தொடங்குகிறது. குழந்தை நிழலை விட்டு தூரமாக ஓட விரும்புகிறது, ஆனால் ஓட முடியாமல் அழத் தொடங்குகிறது. யாரோ தன் வழியைத் தடுப்பதாக அந்த பெண் குழந்தைக்கு ஆச்சரியமும் அச்சமும் ஏற்படுகின்றது. குழந்தை அச்சப்படுவதை பார்க்க பாவமாக இருந்தாலும், நம்மால் இதை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
நிழலை பார்த்து அழும் குழந்தையின் வீடியோவை இங்கே காணலாம்:
சமூக ஊடகங்களில் வீடியோ வைரல் ஆனது
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித வித்தியாசமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப் பெண்ணின் பின்னால் மரத்துண்டு கிடப்பதைப் பார்த்து, ஒரு பயனர் 'பெண்ணுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறதா' என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் murtaza.raazi என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
மேலும் படிக்க | ஓடிடுடா கைப்புள்ள!! நாயின் கோவத்துக்கு சிறுவனின் கியூட் ரியாக்ஷன்: வைரல் விடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ