நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ திரைப்படத்தின் Sneak Peek 02 வீடியோ!

நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தின் Sneak Peek 02 வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Mar 26, 2019, 05:49 PM IST
நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ திரைப்படத்தின் Sneak Peek 02 வீடியோ!
Screengrab

நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தின் Sneak Peek 02 வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் 3 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை, எனினும் பார்பவர்களை பயத்தில் அமர வைக்கவும் மறக்கவில்லை.

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

அதேப்போல் இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டு தோற்றங்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தப் படத்தின் முதல்காட்சி அதிகாலை 5 மணி காட்சி திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.