close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

கூகிளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்!

கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார்.

Updated: Aug 14, 2019, 08:32 AM IST
கூகிளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்!

கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவில் கூகிள் தேடுப்பொறியில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

குறிப்பாக சன்னி லியோனின் பயோபிக், வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளது. ZEE5-ல் வெளியான சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு தொடர் இதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.

டிரெண்டின் பட்டியல் கொடுக்கும் தகவல் படி வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே அதிகமாக சன்னிலியோன் தேடப்பட்டுள்ளார் என தெரிகிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சன்னி லியோனே இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இந்நிலையில் இந்த ஆண்டும் அதனை அவர் தக்கவைத்துள்ளார். இதுதொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவிக்கையில், என்னுடைய குழு இவ்விவரத்தை என்னிடம் கொண்டுவந்தனர். எனக்காகவே உள்ள ரசிகர்களால், சிறந்த உணார்வை கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.