எப்போதும் என்னை நான் பாதிக்கப்பட்டவளாக பார்த்ததில்லை -சன்னிலியோன்!

என் தேர்வு சரியா, தவறா எனத் தெரியாமல் என்னைச் சுற்றி நானே வேலி போட்டிருக்கிறேன். ஆனால், இந்த வேலி சரியென்றே ஆழமாக உணர்கிறேன் என கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஓபன் டாக்!!

Updated: Jul 11, 2018, 05:39 PM IST
எப்போதும் என்னை நான் பாதிக்கப்பட்டவளாக பார்த்ததில்லை -சன்னிலியோன்!

என் தேர்வு சரியா, தவறா எனத் தெரியாமல் என்னைச் சுற்றி நானே வேலி போட்டிருக்கிறேன். ஆனால், இந்த வேலி சரியென்றே ஆழமாக உணர்கிறேன் என கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஓபன் டாக்!!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சமீபத்தில் 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'-னின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ட்ரைலர் வெளியிட்டனர். அது சன்னிலியோன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இதை தொடர்ந்து, இத்தொடரின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்...! 

“நான் எப்போதும் என்னை பாதிக்கப்பட்டவளாக பார்ப்பதில்லை, அதனால் நான் மக்களின் பேச்சுகளுக்கு மென்மையான இலக்காக இருக்கிறேன். சரியோ, தவறோ அவர்களுக்கு தெரிந்த நியாயத்தின்படி நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டுமென்பதை சொல்ல அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் பல நேரங்களில் அவர்களின் பேச்சு முட்டாள்தனமான இருப்பதால் நான் அதை ஒதுக்கிவிடுவேன். 

மேலும், அவர் தொடருக்காக தனது வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர்களிடம் பேசிய தருணம் எனக்கு “சிரிப்பும், கண்ணீருமாக” தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் இடம் பெறக் கூடாத பகுதிகள் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர்; “நிறையவே இருக்கிறது. கதையை எந்த புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட வேண்டும் என்பது குறித்து இயக்குநர் ஆதித்யா தத்-யுடன் பேசியுள்ளோம். 

அனைவரின் வாழ்விலும் நல்லது, கெட்டது என இரண்டும் கலந்துதானே இருக்கும். தொடர்ந்து 6 மாதங்கள் என் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி அனைத்தையும் பேசி அதன் அடிப்படையில் 20 எபிசோடுகளை உருவாக்கியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ஆதித்யா தத்துடன் உங்களின் வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்ள எடுத்த முடிவு சரிதானா…? எனக் கேட்டதற்கு அவர் ‘பயமாகத்தான் இருந்தது’ என்றார். ஆனால் இயக்குநர் ஆதித்யா தனது முழு கதையையும் அழகாக படமெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

“நான் செய்த செயல் சரியென வாதிட்டாலும் ஆதித்யா அதை மிக அழகாக படமெடுத்துள்ளார். நான் நானாகவே காண்பிக்கப்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். 

“என் தேர்வு சரியா, தவறா எனத் தெரியாமல் என்னைச் சுற்றி நானே வேலி போட்டிருக்கிறேன். ஆனால், இந்த வேலி சரியென்றே ஆழமாக உணர்கிறேன்’’ என்றும் அவர் கூறினார்!