Video: அனிரூத் இசையில் வெளியானது The Karma சிறப்பு பாடல்!

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் உருவாகி வரும் U Turn திரைப்படத்தின் சிறப்பு பாடல் ’The Karma’-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - ZEE Bureau | Last Updated : Sep 4, 2018, 09:29 AM IST
Video: அனிரூத் இசையில் வெளியானது The Karma சிறப்பு பாடல்!

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் உருவாகி வரும் U Turn திரைப்படத்தின் சிறப்பு பாடல் ’The Karma’-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகை சாரதா ஸ்ரீநாத் நடிப்பில் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திகல் திரைப்படம் U Turn. சாலை விதிகளை மீறுவதால் எற்படும் தொடர் கொலை குறித்து இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு வெளியானது.

கன்னட மொழியில் இப்படம் ஹிட் அடித்த நிலையில், இதே கதையினை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி தமிழிலும் அதே பெயரில் படக்குழுவினர் உறுவாக்கியுள்ளனர்.

கன்னடாவில் சாரதா ஸ்ரீநாத் ஏற்ற கதாப்பாத்திரத்தினை தமிழில் சமந்தா ஏற்ப இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் சமந்தா, ஆதி, பூமிகா முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாச சில்வர் ஸ்க்ரீன் மற்றும் BRB கிரியேஷன்ஸ் இத்திரைப்படத்தினை தயாரிக்கின்றது. கன்னட மொழி U Turn-க்கு இசையமைத்த பூர்ணச்சந்திர தேஜேஷ்வனியே தமிழிலும் இசையமைக்கின்றார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பு பாடலான ’The Karma’-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலினை இசையமைத்து பாடியுள்ளார் அனிரூத் ரவிச்சந்திரன்.

More Stories

Trending News