என்னை மிகவும் பாதித்த நூல் 'பூணூல்' -கமல் ட்விட்!!

தன்னை மிகவும் பாதித்த நூல் "பூணூல்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Jul 1, 2018, 04:44 PM IST
என்னை மிகவும் பாதித்த நூல் 'பூணூல்' -கமல் ட்விட்!!

தன்னை மிகவும் பாதித்த நூல் "பூணூல்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்! 

ட்விட்டர் இந்தியா நடத்திய வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில், #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். இதன் தொடர்ச்சியாக கமல்ஹாசனிடம் ட்விட்டரில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, தாங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் எது? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன்,  தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் தவிர்த்த நூலும் அது தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலின் இந்த இந்த ட்விட்டர் பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! 

More Stories

Trending News