எழுத்து (Spelling) வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம், ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான் என்று பா. இரஞ்சித்தின் 'நீலம் புக்ஸ்' விற்பனையகத்தின் திறப்பு விழாவில் கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார்.
Makkal Needhi Maiam Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல மணிநேரங்கள் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
யானை ஒன்று பிளாஸ்டிக் நெகிழிப் பையை சாப்பிட்டும் வீடியோ வைரலாகியிருக்கும் நிலையில், வனப்பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள 100 விழுக்காடு நெகிழி தடையை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது.
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம், பட்ஜெட்டில் தமிழக அரசு 13 திட்டங்களைக் குறிப்பிட்டு அவை எப்போது செயலாக்கம் பெறும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மாற்று வருவாயைப் பெருக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.