இன்றைய டிரெனடிங்கில்! #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது!

டிவிட்டரில் தற்போது #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஸ்டேக் மிகவும் வைரலாகி வருகிறது. 

Updated: Feb 22, 2020, 02:02 PM IST
இன்றைய டிரெனடிங்கில்! #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது!

டிவிட்டரில் தற்போது #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஸ்டேக் மிகவும் வைரலாகி வருகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுது கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று மருத்துவமனையில் இருந்த மக்களை சந்தித்தார். அப்போது அங்கு நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார் என்று சந்தோஷ் வினவினார். நான் தான்பா ரஜினி என்று அவர் கூறியபோது, எனக்கு தெரியவில்லை என்று கூறி ரஜினியை அவமானப்படுதினார். அப்போது அவர் உபயோகப்படுத்திய நான்தாப்பா ரஜினி என்ற சொல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையொட்டி தற்போது முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமாரின் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. வடபாகம் போலீசார் விசாரணையில், தூத்துக்குடி, பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்(23) மற்றும் கால்டுவெல் காலணி மணி(23), ஆசிரியர் காலணி சரவணன்(22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களைக் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், கைதான சந்தோஷைக் குறிப்பிட்டு #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.