சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே பன்சா? டிவிட்டரில் டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி ஹேஷ்டேக்!!

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை குறித்து தெளிவுப்படுத்திய பிறகு.. டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 12, 2020, 06:20 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே பன்சா? டிவிட்டரில் டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி ஹேஷ்டேக்!!
Photo: Twitter

சென்னை: கடந்த வாரம் சென்னை (Chennai) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்தரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இன்று மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் லீலா பேலஸ் ஓட்டலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்பொழுது அவர் தனது அரசியல் பிரவேசத்தை குறித்து தெளிவுப்படுத்தினார். அதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒருபக்கம் #RajinikanthPolitics மூலம் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் மற்றொரு ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. வாருங்கள் அவர்கள் என்ன தான் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்....!!

#இலவுகாத்தகிளி_ரஜினி