மெர்சல், காலா தொடர்ந்து பிகில் திரைப்படத்திற்கு தனி emoji..

விஜயின் மெர்சல், ரஜினியின் காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு தனி emoji வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா!

Last Updated : Oct 23, 2019, 02:21 PM IST
மெர்சல், காலா தொடர்ந்து பிகில் திரைப்படத்திற்கு தனி emoji.. title=

விஜயின் மெர்சல், ரஜினியின் காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு தனி emoji வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா!

இந்த பிரத்தியேக emoji-னை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த emoji-னை #Bigil, #வெறித்தனம், #BigilDiwali, #PodraVediya, #தளபதி63 ஆகிய ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் பயன்படுத்துவதன் மூலம் இயக்கலாம்.

இதுகுறித்து ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ  ட்விட்டர் கணக்கில் பதிவிடுகையில்., "பிகில் வெளியாகிறது விரைவில்! Tweet using #Bigil, #வெறித்தனம், #BigilDiwali, #PodraVediya, #தளபதி63 to activate the emoji and show some love" என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய், அட்லி கூட்டணியில் உருவாக மெர்சல் திரைப்படத்திற்கும், இயக்குநர் ரன்ஞித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவான காலா திரைப்படத்திற்கும் ட்விட்டர் இந்தியா பிரத்தியேக emoji-னை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேப்போன்று சமீபத்தில் வெளியான பிரபாசின் சாஹூ திரைப்படத்திற்கும் பிரத்தியேக emoji வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இத்திரைப்படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக்,  பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்தியா மற்றும் சீனாவில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 25-ஆம் நாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும் இத்திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News