மனித முகத்தை போன்றே தோற்றம் கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நிகோலஸ் என்ற நாய்க் குட்டியின் முகத் தோற்றம் மனிதனின் முகம் போல் இருப்பதாகக் கூறி அந்த நாய் குட்டியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முகம் முழுக்க முடியுடன் கூடிய குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த அந்த நாய்க்கு அதன் உரிமையாளர் முடியை வெட்டியுள்ளார்.
கண்களை பார்க்க மனிதனுடையது போல தெரிந்திருக்கிறது. உடனே அந்த நாய் குட்டியின் முகத்தில் இருந்த முடியை நீக்கி அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாயின் உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட சில நிமிடத்திலேயே அந்த புகை படத்துக்கு லைக்ஸ் கொட்டியுள்ளது.
THIS DOG HAS A HUMAN FACE pic.twitter.com/nEmQ6ZgJcZ
— Ellie Hall (@ellievhall) March 12, 2018
இதை தொடர்ந்து கமென்ட்களும் தெரியாக பறக்க விட்டுள்ளனர். அதை தொடர்ந்து இந்த புகைப்படத்தை அனைவரும் ஷேர் செய்தது உலகம் முழுக்க நாயின் புகழ் பரவியது. அந்நாயின் கண்கள் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்களை போன்றே உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
I think it looks like someone else closer than Jake Gyllenhaal, but I can't figure it out pic.twitter.com/bSv34JcWwy
— Ryan Broderick (@broderick) March 12, 2018
அதுமட்டுமல்லாது வாயும் அப்படித்தான் இருக்கிறது. முதலில் இதை முகநூலில் பார்த்த பலரும், போட்டோஷாப் வேலையாக இருக்கும் என கூறினர்.இதற்கு மறுப்பு தெரிவித்த நிக்கோலஸின் உரிமையாளர் சாந்தல் டெஸ்ஜார்டின்ஸ், இது ஒன்றும் போட்டோ ஷாப் நாய் கிடையாது. இது எனது சொந்த நாய் என விளக்கமளித்துள்ளார்.
That dog is Topher Grace pic.twitter.com/FA1pKliqCF
— JCFalls (@darbeebarbee) March 13, 2018
அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் முகநூலில் தனது செல்ல நாயை பதிவேற்றம் செய்ததாகவும், அந்த போட்டோ இணையத்தில் வைரலானதாகவும் தெரிவித்துள்ளார். இது என்ன நாயா? என நிக்கோலஸ் போட்டோவிற்கு 19,000 நபர்களிடமிருந்து குழப்பமான கமெண்ட்ஸ் வந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
SOMEONE GET A DNA TEST STAT pic.twitter.com/ccDesVPXI0
— Sian Welby (@Sianwelby) March 13, 2018