பவர் ரேஞ்சர்ஸ் போல் சண்டையிடும் பூனைகுட்டிகள்! வைரல் வீடியோ!

இரண்டு பூனைகள் வேகமாக சீறிக்கொண்டு வந்து ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 03:40 PM IST
  • புயல் வேகத்தில் பாய்ந்து சண்டை போடும் பூனை.
  • ஒன்றுக்கொன்று அடித்து கொண்டு சண்டை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பவர் ரேஞ்சர்ஸ் போல் சண்டையிடும் பூனைகுட்டிகள்! வைரல் வீடியோ! title=

விலங்குகள் எவ்வளவு தான் அமைதியாகவும், குறும்புத்தனமாகவும் சில செயல்களை செய்தாலும், அவை பெரும்பாலான நேரங்களில் அதன் இனத்துக்குள்ளேயோ அல்லது வேறு வகை விலங்குகளிடையேயோ  சண்டையிட்டு கொள்ளுகின்றன.  ஆனால் அதுபோன்று விலங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்ளும் காட்சிகளை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும்.  அப்படி ஒரு காட்சி தான் இணையத்தில் பதிவேற்றப்பட்டு தற்போது பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

cat

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள் 

பல அற்புதமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரலாகி வரும் வீடியோவில், பசுமையான புற்கள் நிரம்பிய நிலப்பரப்பில் சாம்பல் நிறத்தில் கொழுகொழுவென்று பூனை ஒன்று படுத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இதனை பார்த்ததும் அமைதியான வீடியோ என்று தோன்றுகிறது, ஆனால் சில நிமிடங்களில் அங்கு நடக்கும் காட்சி திகிலை கிளப்புகிறது.  அந்த பூனைக்கு நேரெதிரே, உள்ள மரத்தின் அருகில் கருப்பு நிறத்தில் ஒரு பூனை ஒன்று வேகமாக இந்த பூனையை நோக்கி வருகின்றது.  

 

பின்னர் அந்த பூனை இரண்டும் பாய்ந்து ஒன்றையொன்று தாக்கி கொள்கிறது, அதோடு அந்த சாம்பல் நிற பூனை ஓடுவிடுவதுடன் வீடியோ முடிவடைகிறது.  இந்த வீடியோவுடன் 'நிஞ்சா பூனை' என்று கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளதோடு, பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆமைகளுக்குள் நடந்த வித்தியாசமான போட்டி! வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News