IIT விடுதியில் ஆணுறை பயன்படுத்த தடை; நிர்வாகம் அதிரடி...

IIT Madras கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக தகவல் பலைகயில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Dec 4, 2018, 03:25 PM IST
IIT விடுதியில் ஆணுறை பயன்படுத்த தடை; நிர்வாகம் அதிரடி... title=

IIT Madras கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக தகவல் பலைகயில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

IIT Madras கட்டுப்பாட்டில் உள்ள ஆடவர் விடுதியில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி பயன்படுத்தும் மாணவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் விடுதி காப்பாளர்கள் அதிரடியாக மாணவர்கள் அறையில் சோதனை நடத்தி தடை விதிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொருட்களை பறிமுதல் செய்தது மட்டும் அல்லாமல், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பெயர்களையும் விடுதி தகவல் பலகையில் பட்டியலிட்டுள்ளனர். இந்த பட்டியலில் மாணவர்கள் பயன்படுத்திய ஆணுறைகளும் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் ஆணுறை பயன்படுத்திய மாணவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதித்து குறிப்பிட்டுள்ளனர். 

மாணவர்கள் தடையை மீறி பொருட்களை பயன்படுத்தி இருந்தாலும், அதனை வெளிப்படையாக பட்டியலிடுவது கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தகவல்பலகையில் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலினையும் மாணவர்கள் இணைத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதிதல் வைரலாகி வருகின்றது.

Trending News