நடிப்பில் கலக்கும் தந்தை, நீச்சலில் கலக்கும் மகன்: மாதவன் மகன் செய்த சாதனை இதுதான்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தந்தைக்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். விளையாட்டுத் துறையில் அவர் செய்யும் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 3, 2021, 06:43 PM IST
  • நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் சாதனை செய்துள்ளார்.
  • லாட்வியன் ஓப்பன் தகுதிச் சுற்றில் வெண்கலம் வென்றுள்ளார்.
  • மாதவன் அவர் இயக்கிய முதல் படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார்.
நடிப்பில் கலக்கும் தந்தை, நீச்சலில் கலக்கும் மகன்: மாதவன் மகன் செய்த சாதனை இதுதான்

சென்னை: சாக்லெட் பாய் மாதவன் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பல மொழிகளில் அவர் நடித்துள்ளதால், இந்தியா முழுவதும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரது ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயங்களாகும். ‘இறுதிச்சுற்று’ 'விக்ரம் வேதா’ ஆகிய அவரது சமீபத்திய படங்கள் அவரது நடிப்புக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக அமைந்தன. பாக்சிங் பயிற்சியாளராகவும் காவல் துறை அதிகாரியாகவும் இரு படங்களிலும் அவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.

நடிகர் மாதவனின் (Madhavan) மகன் வேதாந்த், தந்தைக்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். விளையாட்டுத் துறையில் அவர் செய்யும் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 2019 ஆம் ஆண்டு, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர் ஆசிய வயதுக் குழு நீச்சல் போட்டிகளில் (Swimming Championship) வெள்ளி பதக்கம் வென்றார். இப்போது லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை செய்துள்ளார்.

நீச்சல் வீரர்களான சாஜன் பிரகாஷ், தனிஷ் ஜார்ஜ் மேத்யூ மற்றும் வேதாந்த் மாதவன் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம் இரண்டு வெண்கலம் மூன்று பதக்கங்களை வென்றது. 16: 28.25 நேரத்தில் இலக்கை அடைந்த வேதாந்த், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தன்னுடைய முந்தைய சாதனை நேரமான 17: 25.41-ஐ முறியடித்தார்.

ALSO READ: OTT-யில் பட்டையைக் கிளப்பும் Drishyam 2: இந்த விலைக்கு விற்கப்பட்டது Satellite Rights!!

தனது மகனின் சாதனையை பற்றி சமூக ஊடகங்காளில் தெரிவித்த மாதவன், “லாட்வியன் ஓப்பன் தகுதிச் சுற்றில் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று இந்திய அணி செய்த சாதனையால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஒலிம்பிக் பி –க்கு தகுதி பெற்றதற்கு வாழ்த்துக்கள் @sajanprakash. கடவுள் உங்களை மிகப்பெரிய வெற்றிகளால் ஆசீர்வதிப்பார். இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற @tanishgeorge மற்றும் @vedaant_madhavan ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்களால் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். உங்களை விட வயதான மற்றும் வலுவான நீச்சல் வீரர்களை நீங்கள் வென்றீர்கள். பிரதீப் சார், பீட்டர் சார், முருகேஷ் சார் மற்றும் @ansadxb ஆகியோருக்கு, வேதாந்த் மற்றும் அனைவருக்கும் பின்னால் பெரிய சக்தியாக இருந்து அவர்களை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி” என்று எழுதியுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

மாதவனைப் பொறுத்தவரையில், அவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார். அதில் அவர் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரனும் சூரியாவும் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ALSO READ: Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News