வனிதா விஜயகுமார் 4வது திருமணம்; பவர் ஸ்டார் புதிய கணவரா: வைரலாகும் புகைப்படம்

நடிகை வனிதா விஜயகுமாரின் 4வது திருமண புகைப்படம் வெளியாகி வைராலாகி வருகிறது  

Written by - ZEE Bureau | Last Updated : Jul 22, 2021, 09:50 AM IST
வனிதா விஜயகுமார் 4வது திருமணம்; பவர் ஸ்டார் புதிய கணவரா: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என செட்டிலான வனிதா சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா (Vanitha Vijayakumar) தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடித்து வருகிறார். அதே நேரத்தில் தற்போது அவ்வபோது சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா (Social Media) பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார் வனிதா. 

ALSO READ | மீண்டும் காதலில் சிக்கிக்கொண்டாரா வனிதா விஜயகுமார்?

இதற்கிடையில் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளியது மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் காலந்துக்கொண்ட நடிகை வனிதா அதில் ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதன்படி, வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி தற்போது நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

ALSO READ | இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News