Viral: பழங்களை சுத்தம் செய்ய முகமூடியை உபயோகப்படுத்திய பழ வியாபாரி!!

முக கவாசத்தை கொண்டு பழங்களை சுத்தம் செய்யும் பழ வியாபாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...!

Last Updated : Sep 9, 2020, 01:53 PM IST
Viral: பழங்களை சுத்தம் செய்ய முகமூடியை உபயோகப்படுத்திய பழ வியாபாரி!! title=

முக கவாசத்தை கொண்டு பழங்களை சுத்தம் செய்யும் பழ வியாபாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், முக கவாசத்தை கொண்டு பழங்களை சுத்தம் செய்யும் பழ வியாபாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பிட்டு கைகளை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் ட்விட்டரில் வைரலாகி வரும் பழ வியாபாரியின் வீடியோ நம்மை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ | இப்படி பாத்துட்டே இருந்த எப்டி?... சாப்பிட எதாவது போடுங்க... கரடியின் கியூட் வீடியோ!! 

சுமார் 44 வினாடிகளை கொண்ட இந்த வீடியோவை ஹிமான்ஷு பாகுனி (@himmi100) என்ற ட்விட்டர் பயனர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற பேன்ட் போட்டுள்ள ஒரு பையன் தனது தள்ளுவண்டி பழக்கடை முன் அமர்ந்துள்ளார். அப்போது அவர் பழங்களை சுத்தம் செய்ய தனது கையில் இருந்த முக கவாசத்தை உபயோகப்படுத்துகிறார். இதையடுத்து, அந்த பலத்தை வைத்துவிட்டு கூடையில் இருந்து மற்றொரு பழத்தை எடுத்து அவர் முகமூடியால் சுத்தம் செய்கிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்டுப்பாக்க அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த வீடியோவுடன் அந்த ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார்., கொரோனா பரவும் முகமூடியால் பழங்களை சுத்தம் செய்யும் பழ வியாபாரியின் வைரல் வீடியோ டெல்லியில் நடப்பதை காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருக்கின்றனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,115-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 43,70,129 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 33,98,845-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 8,97,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 73 ஆயிரத்து 890-பேர் உயிரிழந்துள்ளனர். 

Trending News