நவமலை பாதையில் சென்றுக்கொண்டு இருந்த காரை யானை தாக்கி முட்டித்தள்ளியதில் கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் இவர் அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரும் இவரது உறவினர்கள் இரண்டு பேரும் நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் வீட்டிற்கு இரு கார்களில் சென்றுள்ளனர்.
அப்போது வால்பாறை கவியருவி பகுதியிலிருந்து நவமலை செல்லும் பாதையில் சென்றபோது அங்கே இருந்த ஒற்றை காட்டு யானை இவர்கள் சென்ற பாதையின் குறுக்கே வாகனத்தை மறித்ததால் அதிர்ச்சி அடைத்த அவர்கள் சுதாரித்துக்கொண்டு இரு கார்களையும் பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது யானை இருக்கார்களையும் துரத்தியுள்ளது. இதில் சரவணன் ஓட்டிய காரை யானை தாக்கி முட்டித்தள்ளியதில் கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. மேலும் யானை காரை மீண்டும் மீண்டும் தாக்கியதில் மூன்று முறை கார் உருண்டோடியது. இந்தக் காட்சியைப் பார்த்த சரவணனுடன் சென்ற உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த வைரல் வீடியோவை காணுங்கள்
மேலும் படிக்க: ஜாக்கிசான் போல காற்றில் பாய்ந்த தேவாங்கு! வைரல் வீடியோ!
அதிர்ஷ்டவசமாக அங்குவந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் யானையை காட்டுக்குள் விரட்டி காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தும் சென்றுள்ளனர்.
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களை சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக கடந்த 10 நாட்களாகவே காட்டுயானை அப்பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் கவனமுடனும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அப்பகுதியை கடக்க எச்சரிந்திருந்த நிலையில் எச்சரிக்கையை மீறி சென்றதால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிங்கத்தை பந்தாடிய காட்டெருமை - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR