சண்டைக்கு வந்த குட்டி காட்டெருமையிடம் கியூட்டாக பின்வாங்கும் யானை - வைரல் வீடியோ

அடர்ந்த வனப்பகுதிக்குள் குட்டி காட்டெருமை ஒன்று சண்டைக்கு செல்ல, ராட்சத யானை கியூட்டாக பின்வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 15, 2024, 09:52 AM IST
  • யானையுடன் மோதும் குட்டி காட்டெருமை
  • மோத முடியாமல் பின்வாங்கிய யானை
  • கியூட்டான வைரல் வீடியோ இணையத்தில் வைரல்
சண்டைக்கு வந்த குட்டி காட்டெருமையிடம் கியூட்டாக பின்வாங்கும் யானை - வைரல் வீடியோ title=

உருவத்தில் யானை ராட்சத விலங்காக இருந்தாலும், அவ்வப்போதும் அவை வெளிப்படுத்தும் அன்பு மனிதர்களுக்கே பாடமாக அமைந்துவிடும். அப்படியான ஒரு பாடத்தை கொடுக்கும் யானையின் கியூட் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் எடுத்த வீடியோ தான் இது. அதில் யானை ஒன்று ஆக்ரோஷமாக இருந்தாலும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. எதற்காக ஓடுகிறது என்று பார்த்தால் சின்ன குட்டி காட்டு எருமை ஒன்று அதனை துரத்துகிறது. 

மேலும் படிக்க | குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ

பார்ப்பதற்கே ரம்மியமாகவும், அழகாகவும் இருக்கும் இந்த வீடியோவின் சாரம்சம் என்னவென்றால், அந்த காட்டெருமை குட்டியின் தாயும் அருகில் தான் இருக்கிறது. எங்கே யானைக்கு கோபம் வந்து, குட்டியை மிதித்துவிடுவோ என்ற பயத்துடன் அந்த காட்டெருமை அலைய, இந்த குட்டி காட்டெருமை கொஞ்சம் அசராமல் யானை நோக்கி சண்டைக்கு செல்கிறது. இங்குதான் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. யானை ஆக்ரோஷமாக இருந்தாலும், உருவத்தில் ராட்சத உருவமாக இருந்தாலும் அந்த குட்டி காட்டெருமையை எதும் செய்யவில்லை.

அந்த குட்டி காட்டெருமை முட்டுவதற்காக துரத்தும்போதும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டஅந்த யானை பின்வாங்கியதே தவிர, எதிர்த்து ஒரு மிரட்டலுக்கான சமிக்கையை கூட கொடுக்கவில்லை. அதுதான் பார்ப்பதற்கு மிகவும் அழகான விஷயம். யானை நினைத்திருந்தால், கோபபட்டிருந்தால் அந்த குட்டி காட்டெருமையை என்ன  வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால் அது ஒரு குழந்தை என்ற பார்வையிலேயே யானையும் பார்த்தது. அந்த குட்டி காட்டெருமைக்கு பின்னால் நின்ற பெரிய காட்டெருமையின் பரிதவிப்பும் இதனையே பிரதிபலித்தது. அழகான இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News