சாக்லெட் திருட வந்த குட்டி திருடன் - திகைத்துப்போன கடை உரிமையாளர்: வைரல் வீடியோ

மூடிய கடைக்குள் புகுந்து சாக்லெட் திருடிய குட்டி திருடனை கண்டு கடை உரிமையாளர் திகைத்துப்போன வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2023, 02:02 PM IST
  • மிட்டாய் திருடும் சுட்டிக் குழந்தை
  • அசால்டாக இருந்த கடைக்காரர்
  • இணையத்தில் வைரலான காமெடி வீடியோ
சாக்லெட் திருட வந்த குட்டி திருடன் - திகைத்துப்போன கடை உரிமையாளர்: வைரல் வீடியோ title=

குழந்தைகள் சுட்டித்தனத்துக்கு அளவே இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை நல்லது கெட்டது என்றெல்லாம் எதுவும் கிடையாது. தங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால் அதனை பெற எத்தகைய சேட்டைகளிலும் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் அவர்களின் பெற்றோர்களுக்கே தெரியாமல் செய்யும் சேட்டை திகைக்க வைக்கும். குறிப்பாக அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்கள் இருக்கும் இடத்தை அல்லது கடையை தெரிந்து கொண்டால் அந்த கடைக்கு அடிக்கடி செல்வார்கள். கடைக்காரர் காசு கேட்டால் அதனை சமாளிக்க சில காமெடியான ஐடியாக்களையும் தன் வசம் வைத்திருப்பார்கள். உதாரணமாக அம்மா வாங்கி வரச் சொன்னாங்கனு சொல்வாங்க. இல்லையென்றால் கடைக்காரர் இல்லாத நேரம் பார்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டை எடுத்து சாப்பிட முயல்வார்கள். 

மேலும் படிக்க | ராட்சத மலைப்பாம்புக்கே விபூதி அடிச்ச கோழி; திக் திக் வைரல் வீடியோ

சில நேரங்களில் இந்த வித்தை அவர்களுக்கு கை கொடுத்தாலும், அவர்களின் கள்ளம்கபடமில்லா சுட்டித்தனத்தால், மீண்டும் மீண்டும் அதனை செய்து மாட்டியும் கொள்வார்கள். அப்படி ஒரு குட்டி திருடனை பார்த்து தான் கடை உரிமையாளர் ஒருவர் திகைத்துபோய்விட்டார். வியாபாரம் முடித்துவிட்டு, கடையை மூடிய பிறகு அமைதியாக இருந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவருக்கே தெரியாமல் ஒரு குட்டித் திருடன் கடைக்குள்ளே புகுந்து தனக்கான மிட்டாயை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடுகிறார். அந்த திருடன் ஓடிய பிறகே கடையில் திருடு போய் இருக்கிறது என்பதை உணர்ந்து அந்த கடைக்காரர் எழுந்து வந்து பார்க்கும்போது அந்த குட்டி திருடன் சாமார்த்தியமாக எஸ்கேப் ஆகிவிட்டார். செம காமெடியான இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் ஒருவர் கடையை மூடிய பிறகு செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் கடையின் கதவை திறந்து உள்ளே வரும் குழந்தை, மிட்டாயை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடுகிறது. இதனை சிறிது நேரத்துக்குப் பிறகே பார்க்கிறார் கடைக்காரர். அதற்குள் குழந்தை ஓடிவிட, அவரை பிடிக்க பின்னால் ஓட முயற்சிக்கிறார் அந்த நபர். இருந்தாலும் அந்த குட்டி திருடனை அவரால் பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  

மேலும் படிக்க | என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News