என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல்

Dangerous Python Swallows Crocodile: மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலையை விழுங்கி நடுரோட்டில் தவிக்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2023, 12:23 PM IST
  • இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல் title=

மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோ அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாலையை காட்டி காட்டி கடுப்பேத்திய மணப்பெண்: நொந்துபோன மாப்பிள்ளை, வைரல் வீடியோ

இந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று ராட்சத முதலையை, மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. மேலும் அந்த முதலையை சரியாக விழுங்க முடியாமல் நடு ரோட்டில் அந்த மலைப்பாம்பு அவதிப் படுவதை நாம் வீடியோவில் காணலாம். அங்கிருந்த பலர் அந்த பாம்புக்கு உதவ முயற்சிக்கின்றனர். இறுதியாக விலங்குகள் நல மருத்துவர்கள் மலைப்பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, மலைப்பாம்பின் வயிற்றில் இருந்த முதலையை வெளியே எடுத்தனர். இந்த முயற்சியின்போது மலைப்பாம்பை மருத்துவர்கள் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பாம்பின் வயிற்றை இரண்டாக கிழித்து, வயிற்றுக்குள் இருந்த முதலையை வெளியே எடுத்தனர்.

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சிங்கத்துக்கே சவால் விடும் கழுதைப்புலி! சிங்கப் பெண்ணின் பரிதாப நிலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News