டிரைவர் இல்லாத கார் என்பது இப்போது சாத்தியமாகிவிட்டது. டெஸ்லா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்கள் தொழில்நுட்பங்களின் உதவியுடன் டிரைவர் இல்லாமல் செல்லக்கூடிய காரை பயன்பாட்டுக் கொண்டு வந்துவிட்டன. சென்சார்கள் மூலம் இயங்கும் அந்த கார்கள் சாலையில் முன்னால் மற்றும் பின்னால் செல்லும் கார்களின் தூரத்தை கணித்து அதற்கேற்ப தன்னை இயக்கிக் கொள்ளும். அந்த வகையில் அதிதொழில்நுட்ப வசதியுடன் அந்த கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இது புதிய விஷயம் என்றாலும், வியத்தகு வகையில் பெட்ரோலில் இயங்கும் ஒரு கார் தேசிய நெடுச்சாலையில் டிரைவர் இல்லாமல் செல்கிறது.
இதனை பார்த்த இன்னொரு காரில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது. அதெப்படி டிரைவர் இல்லாமல் கார் இயக்கும். அதுவும் மிக அதி வேகத்தில் என அந்த காரை சேஸ் செய்ய முடிவெடுக்கின்றனர். தங்களால் இயன்ற வேகத்தில் சென்று அந்த காருக்கு அருகில் செல்கின்றனர். உண்மையிலேயே அந்த காரின் டிரைவர் சீட்டில் யாரும் இல்லை. ஆனால், டிரைவர் சீட்டுக்கும் அருகில் ஒரு முதியவர் மட்டும் ஜாலியாக அமர்ந்திருக்கிறார். ஆனால், கார் எந்தவித சலனமும் இல்லாமல் செல்கிறது.
பத்மினி என்ற பழைய மாடல் கார் அப்படி இயங்குகிறது. அதெப்படி சாத்தியம் என பின்னால் காரை சேஸ் செய்தவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்திருக்கிறது. உண்மையில் டிரைவிங் ஸ்கூல் கார்களையெல்லாம் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர்ந்தபடியே கன்ட்ரோல் செய்யும் வகையில் செட்டிங்ஸ் செய்து வைத்திருப்பார்கள். அப்படியான செட்டிங் அந்த காரிலும் இருக்கும் என சில வாகன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். டிரைவர் இல்லாமல் அந்த கார் செல்ல வாய்ப்பே இல்லை என்பதால், இப்படியான செட்டிங் இருக்கும், அதனால் தான் அந்த கார் அப்படி செல்கிறது என விளக்கம் கொடுத்துள்ளனர். எது எப்படியோ பார்ப்பவர்களுக்கு டிரைவர் இல்லாமல் கார் ஓடுகிறது என்ற எண்ணம் தான் தோன்றும். இந்த வீடியோ முகநூலில் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கை பார்க்க மைதானத்திற்குள் வந்த நாகப்பாம்பு? வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ