டோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவன்! வைரல் வீடியோ

டோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி பரவி வருகிறது. 

Updated: May 13, 2019, 02:27 PM IST
டோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவன்! வைரல் வீடியோ

டோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி பரவி வருகிறது. 

IPL 2019 தொடரின் இறுதி போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின.

இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டோனியின் ரன் அவுட் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் டோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.