இப்போ டைம் இல்ல பொழச்சுபோனு விடுறேன்! பூனை மீது ஏறி விளையாடும் எலி!

பூனை ஒன்று அதன் மீது சாவகாசமாக நடந்து செல்லும் எலியை எதுவும் செய்யாமல் அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2022, 09:50 AM IST
  • அமைதியாக படுத்து தூங்கும் பூனை.
  • பூனையின் மேல் ஏறி விளையாடும் எலி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
இப்போ டைம் இல்ல பொழச்சுபோனு விடுறேன்! பூனை மீது ஏறி விளையாடும் எலி!  title=

பூனைக்கு பரம எதிரி என்றால் எலியை தான் கூறுவோம், பூனையை கண்டாலே எலிகள் தலைதெறிக்க ஓடிவிடும்.  பூனைகளுக்கு ருசியான உணவே எலிகள் தான், பல நாடுகளில் எலி தொல்லையை குறைப்பதற்காக பூனைகளை வளர்த்து வருகின்றனர்.  அப்படி பூனைகளை பார்த்து நடுங்கிக்கொண்டிருந்த எலிகள் இப்போது தைரியமாக வலம் வர தொடங்கிவிட்டன.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கூட எலி ஒன்று பயமில்லாமல் பூனையின் மீது தைரியமாக நடந்து செல்கிறது, இந்த காட்சி இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

rat

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு அட்டைப்பெட்டியின் மீது எலி ஒன்று இருப்பதையும், அந்த அட்டை பெட்டியின் அருகே தரையில் நன்கு கொழுகொழுவென ஒரு பெரிய பூனையும் படுத்து இருப்பதை காண முடிகிறது.  பின்னர் சிறிது நேரத்தில் அந்த எலி மெதுவாக நடந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்குவது போன்று பூனையின் மீது குடுகுடுவென இறங்கி வருகிறது.  அந்த குறும்புக்கார எலியை, பூனை எதாவது செய்யும் என்று பார்த்தால் அது அமைதியாக தூக்க கலக்கத்தில் படுத்து இருக்கிறது.  பூனையின் வயிற்றுப்பகுதியில் எலி நடந்து வரும்போது மட்டும் அந்த சோம்பேறி பூனை லேசாக தனது முன்னங்கால்களை அசைக்கிறது.

 

இதில் எலி மாஸாகவும், பூனை வேஸ்டாகவும் மாறிவிட்டது, இந்த காட்சியை கண்ட பலரும் பூனையின் நிலைமையை பார்த்து சிரிக்கின்றனர்.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பதோடு, இந்த வீடியோவிற்கு பல லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News