Viral Video: சும்மா இருக்கும் குரங்கை சீண்டிய பாம்பு... பாடம் கற்பித்த குரங்கு..!!

சமூக ஊடக உலகில் நமக்கு கிடைக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். இதில் நீங்கள் பல அரிய வீடியோக்களைப் காணலாம். இந்த வீடியோக்களில் சில நமக்கு ஆச்சர்யத்தை அளிப்பவையாக இருக்கும். சில அச்சத்தை கொடுப்பவையாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2024, 01:28 PM IST
  • சமூக ஊடக வீடியோக்களில் சில நமக்கு ஆச்சர்யத்தை அளிப்பவையாக இருக்கும்.
  • பாம்பு அங்கிருந்து சென்று விடுகிறது.
  • திடீரென்று இரண்டு விஷப் பாம்புகள் அதன் அருகில் செல்கின்றன.
Viral Video: சும்மா இருக்கும் குரங்கை சீண்டிய பாம்பு... பாடம் கற்பித்த குரங்கு..!! title=

சமூக ஊடக உலகில் நமக்கு கிடைக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். இதில் நீங்கள் பல அரிய வீடியோக்களைப் காணலாம். இந்த வீடியோக்களில் சில நமக்கு ஆச்சர்யத்தை அளிப்பவையாக இருக்கும். சில அச்சத்தை கொடுப்பவையாக இருக்கும். அதே சமயம், சில வீடியோக்கள் நம்பவே முடியாத வகையில் இருக்கும். மனிதர்கள் முதல் விலங்குகளின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் வரையிலான பல வகை வீடியோக்கள் இதில் அடங்கும். அந்த வகையில், பாம்பு மற்றும் குரங்கு இடையேயான சண்டை குறித்த ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த காணொளியை மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருவதால், மிகவும் வைரலாகி வருகிறது.

வன விலங்குகளின் வீடியோக்கள் பார்ப்பதற்கு அரிது என்பதால், இவை பெரும் வரவேற்பை பெறுகின்றன. சில வீடியோக்கள் மிகவும் ரசிக்க தகுந்தவையாக இருக்கும். மக்களின் இதயங்களை வெல்லும் வகையில் இருக்கும். அதே சமயம் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். இந்த வைரல் வீடியோவில் பாம்புக்கும் குரங்குக்கும் நடக்கும் ஆட்டத்தைப் பார்த்து யாராலும் சிரிப்பை அடக்கவே முடியாது. வீடியோவில் சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒரு கல்லின் அமர்ந்திருப்பதைக் காணலாம். திடீரென்று இரண்டு விஷப் பாம்புகள் அதன் அருகின் வந்தடைகின்றன. தன்னை புத்திசாலி என நினைக்கும் ஒரு பாம்பு குரங்கைத் சீண்டத் தொடங்குகிறது. ஓரிரு முறை குரங்கு பாம்பை கண்டு கொள்ளாமல் இருக்க முயல்கிறது. இருந்தும் விடாமல் சீண்டியதால் கோபமடைந்த குரங்கு, பாம்பை தைரியமாக எதிர்கொண்டதால், பாம்பு அங்கிருந்து சென்று விடுகிறது. இந்த வேடிக்கையான வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

 

மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!

வீடியோவைப் பார்த்து உங்களுக்கும் நிச்சயம் சிரிப்பு வரும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'monkeys_worlds' என்ற பக்கத்திலிருந்து பகிரப்பட்டுள்ளது. இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அதேசமயம், செய்தி எழுதும் வரை, மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். அதே சமயம் அந்த வீடியோவை மக்கள் ரசித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.  குரங்கின் முன் பாம்பு தன் ஆணவத்தை இழந்தது என்று சிலர் கூறுகிறார்கள். எனவே இந்த காணொளி குறித்த உங்கள் கருத்தை கருத்து மூலம் தெரிவிக்கவும்.

மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News