தீ கூட அசால்டாக விளையாடிய இளைஞர்களுக்கு தீஞ்சுபோன முகம்: வைரல் வீடியோ

பைக்கை வைத்து சாகசம் செய்வதற்பகாக நெருப்பை மூட்டி விளையாடிய இளைஞர்களின் முகம் கருகிய வீடியோ இணையத்தை பதறவைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2023, 02:50 PM IST
தீ கூட அசால்டாக விளையாடிய இளைஞர்களுக்கு தீஞ்சுபோன முகம்: வைரல் வீடியோ title=

நெருப்புடன் விளையாடுவது ஆபத்து. அதேபோல் வாகனத்தையும் ஓரிடத்திற்கு செல்வதற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர அதனை வைத்து சாகசங்கள் எல்லாம் செய்யக்கூடாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் முறையான பயிற்சியும், வழிகாட்டி ஒருவரின் வழிகாட்டலுடன் மட்டுமே செய்ய வேண்டும். அப்படி இல்லாமல், தங்கள் எண்ணம் போகிற போக்கில் செய்வது எல்லாம் சாகசம் கிடையாது. அதனால் ஆபத்துகளே அதிகம். அந்த ஆபத்துகள் என்பது இந்த அற்புதமான வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றும் கூட. 

மேலும் படிக்க | என்னதான் லவ் இருந்தாலும் இப்படியா!! மணமகன் செய்கையால் ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ

இதனை பல பேர் புரிந்து கொள்வதில்லை. சிலர் கூறினாலும் தங்களுக்கு கேளிக்கை மீது இருக்கும் ஆர்வத்தால் புறம் தள்ளிவிடுகின்றனர். பின்னர் அதனால் ஏற்படும் ஆபத்துகளை சந்தித்த பிறகு யோசிக்கின்றனர். அப்போது யோசித்து எந்த பயனும் இருக்காது. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும். நெருப்பையும், வாகனத்தையும் வைத்து சாகசம் செய்ய ஒரு இளைஞர்கள் குழு முயற்சிக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் விபரீதமான இந்த முயற்சி ஆபத்தில் முடியப்போகிறது என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. 

கூட்டத்தில் கும்பலோடு கும்பலாக எல்லோரும் கத்து உசுபேத்துகிறார்கள் என்பதற்காக ஜாலியாக விளையாடிக் கொண்டு, பெட்ரோலை பாதுகாப்பற்ற முறையில் உபயோகிக்கின்றனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. நொடியில் பற்றும் தீ வாகனத்துக்கு அருகில் இருந்தவர்களுக்கும், பெட்ரோலை ஊற்றிய இளைஞர் மீது குபீரென பிடித்துவிடுகிறது. அடுத்த நொடியே என்ன செய்வது என தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் பாதுகாப்புக்காகவும், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பரபரப்பாக பறக்கின்றனர். இந்த வீடியோ காண்போரை பதற வைக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் விளையாட்டாக செய்யும் காரியம் இப்படியான ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த வீடியோவே சிறந்த எடுத்துக்காட்டு.  

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி: கலக்கும் இளைஞன், பாராட்டும் நெட்டிசன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News