Watch: BJP வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட இளைஞருக்கு சரமாரி அடி...

தேர்தல் பிரட்சாரத்தின் போது BJP வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவித்த இளைங்கருக்கு சரமாரி அடி, உதை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 03:41 PM IST
Watch: BJP வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட இளைஞருக்கு சரமாரி அடி... title=

தேர்தல் பிரட்சாரத்தின் போது BJP வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவித்த இளைங்கருக்கு சரமாரி அடி, உதை.....

மத்திய பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரட்சாரத்தில் ஈடுபட்டிருந்த BJP வேட்பாளருக்கு ஒரு இளைஞர் செருப்புமாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   
மத்திய பிரதேச மாநிலம் நகாடா மாவட்டத்தை சேர்ந்த BJP MLA-வும், வேட்பாளருமான திலிப் ஷேகாவாத் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். காச்ரோட் பகுதியில் அவர் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது இளைஞர் ஒருவர் செருப்புகள் கோக்கப்பட்ட மாலையை திலீப்புக்கு அணிவித்தார். 

சற்று எதிர்பாராத விதமாக நேரிட்ட இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபமடைந்த BJP வேட்பாளர், செருப்பு மாலையை உடனடியாகக் கழற்றி எறிந்தார். அத்துடன் காலணி மாலை அணிவித்த இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவ வீடியோவானது இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ கீழே இணைக்கபட்டுள்ளது.  

 

Trending News