Watch: வீட்டில் திருட வந்தவர்களை அடித்து துரத்திய வயதான தம்பதிகள்...

நெல்லையில் வீட்டில் திருட வந்த கொள்ளையர்களை துரத்தியடித்த வயதான தம்பதிகள்....

Last Updated : Aug 13, 2019, 10:52 AM IST
Watch: வீட்டில் திருட வந்தவர்களை அடித்து துரத்திய வயதான தம்பதிகள்... title=

நெல்லையில் வீட்டில் திருட வந்த கொள்ளையர்களை துரத்தியடித்த வயதான தம்பதிகள்....

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணபுரம் என்ற இடத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகளான சண்முகவேல் வயது 75, அவரது மனைவி செந்தாமரை வயது 65. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த சண்முகவேலை பின்னே இருந்து கொள்ளையன் ஒருவன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி இருக்கிறான்.

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து கொள்ளையனை கீழே கிடந்த பொருட்களால் தாக்க, இன்னொரு கொள்ளையனும் அந்த இடத்திற்கு வந்தான். இதனிடையே சேரை தூக்கி சண்முகவேல் கொள்ளையனை அடித்ததினால் கொள்ளையனின் பிடி தளர்ந்தது. சுதாரித்துக்கொண்ட சண்முகவேல் மேலும் கீழே கிடந்த பொருட்களை எடுத்து அவர்களை தாக்கினார். செந்தாமரைக்கு காயம் ஏற்பட செந்தாமரை அணிந்திருந்த 35 கிராம் நகையை அறுத்துக்கொண்டு வெளியே கொள்ளையர்கள் தப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு கொள்ளையர்களையும் தம்பதிகள் சேர்ந்து விரட்டினர். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி விரலாக பரவியுள்ளது. 

இது குறித்து கடையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்.  கொள்ளை சம்பவம் சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகளை கொண்டு கொள்ளையர்கள் யாரென அடையாளம் காண போலீஸ் விசாரிக்கிறது. இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொள்கின்றனர், முழு ஒத்துழைப்பும் அவர்கள் தரப்பில் வழங்கப்படுகிறது என தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

 

Trending News