கார் ரேஸில் கலக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் - பார்க்க வீடியோ

Nivetha Pethuraj: நிவேதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காருக்குள் உட்கார்ந்திருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் நீல நிற ரேஸ் உடையில் ஒரு பந்தய வீரரைப் போல தோற்றமளிக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 06:25 PM IST
கார் ரேஸில் கலக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் - பார்க்க வீடியோ title=

Nivetha Pethuraj: திறமையான இளம் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெதுராஜ் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிப்பதில் மும்முரமாக உள்ளார். தனது சமூக வலைப்பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். இன்று, நடிகை தனது ரசிகர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு ஆச்சரியத்தை அளித்துள்ளார். அதாவது Formula Race Car பயிற்சி புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார். அதில் ஒரு வீடியோவும் இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் ஃபார்முலா ரேஸ் காரை ஓட்டி செல்கிறார். 

இதன்மூலம் திரையில் மட்டும் நான் நாயகி இல்லை, நிஜ வாழ்கையிலும் நான் சாகச நாயகி என நடிகை நிவேதா பெத்துராஜ் நிரூபித்துள்ளார். 

இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறுகையில், சிறுவயதிலேயே இருந்து கார்களின் மீதான காதல் எனக்கு உண்டு. நான் 8வது படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் இருப்பவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அன்றிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது ஆர்வம் உருவானது. கோயம்புத்தூரில் உள்ள Momentum School of Advance Racing பள்ளியில் சேர்ந்து பயிற்சியில் பெற்றேன் என்றார். 

நிவேதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காருக்குள் உட்கார்ந்திருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் நீல நிற ரேஸ் உடையில் ஒரு பந்தய வீரரைப் போல தோற்றமளிக்கிறார். அவர் ரைடர் அவதாரத்தில் தன்னைப் பற்றிய படங்களையும் பகிர்ந்து கொண்டார், "மற்றொரு பார்வை .. மற்றொரு கனவு .. மற்றொரு வாழ்க்கை" எனப் பதிவிட்டுள்ளார்.

 

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிவேதா, சமீபத்தில் விஸ்வக் சென்னுக்கு ஜோடியாக "பாகல் (Paagal) படத்தின் படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். பிரபு தேவாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் பொன் மணிகாவேல் படத்திலும் நிவேதா நடித்து வருகிறார். 

ALSO READ | #Video: நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பிரபல நடிகை!

தமிழ் சினிமாத்துறையில் "ஒரு நாள் கூத்து: திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே அனைவரின் கவனத்தை பெற்றார். அவருக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.  அடுத்தடுத்து "டிக் டிக் டிக்", "திமிரு புடிச்சவன்", "சங்கத்தமிழன்" பொதுவாக என் மனசு தங்கம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

Trending News