கீரி குட்டையான கால்களைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு என்றாலும், பாம்பை கண்டால் மூர்க்கமாக தாக்கும் இயல்பைக் கொண்டது. பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் ராஜா நாகப்பாம்பு உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்றாகும். ஆனால், கீரி அதனை மிக மூர்க்கமாக தாக்கும் திறன் கொண்டது.
கொடிய விஷப் பாம்பின் கடி கீரியை ஒன்றும் செய்வதில்லை. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரி சாகாது என்று கூறுவார்கள். பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும்.
நாகப்பாம்புடன் போடும் சண்டையில் 75 முதல் 80 சதவீதம் வரை, கீரி தான் எப்போதும் வெற்றி பெறும். நாகப்பாம்புகள் போன்ற நச்சுப் பாம்புகளுடன் சண்டையிட்டு உண்பது நாகப்பாம்பிற்கு மிகவும் பிடிக்கும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியிலும், கீரியின் தாக்குதலுக்கு முன்னால் நாகம் திணறுவதைக் காணலாம்.
வைரல் வீடியோவில், தனது எல்லையில் நுழைந்த நாகப்பாம்பு ஒன்றை கீரி ஆக்கிரோஷத்துடன் தாக்கி வெளியேற்றுவதைக் காணலாம். ராஜ நாகம் கீர் இருக்கும் பகுதிக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. கீரியை நேருக்கு நேர் சந்தித்த பிறகு, ராஜ நாகம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதை வீடியோவில் காணலாம்.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
வைரலான வீடியோவை இங்கே காணலாம்:
கீரியும் மற்றும் ராஜா நாகப்பாம்பு பரஸ்பரம் தாக்கிக் கொள்வதையும், கீரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நாகப்பாம்பு தப்பி ஓடுவதையும் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR