Hunter Cat: வேட்டைக்கார பூனைக்குட்டியின் எலி வேட்டையும் புலி பாய்ச்சலும்

ஒரு விஷயத்தை விவரித்து சொல்வதை விட ஒரே நொடி கண்ணில் படும் சாதாரண விஷயம் கூட நூறு விஷயங்களை சொல்லிவிடும். காணொளிகளின் வீச்சு அதை நிரூபிக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2022, 03:48 PM IST
  • பூனை வேட்டை
  • எலியை சிக்க வைத்த பூனையின் காத்திருப்பு
  • ஏமாந்து மாட்டிய எலி
Hunter Cat: வேட்டைக்கார பூனைக்குட்டியின் எலி வேட்டையும் புலி பாய்ச்சலும் title=

ஒரு விஷயத்தை விவரித்து சொல்வதை விட ஒரே நொடி கண்ணில் படும் சாதாரண விஷயம் கூட நூறு விஷயங்களை சொல்லிவிடும். காணொளிகளின் வீச்சு அதை நிரூபிக்கிறது.

அண்மைக் காலமாக, சமூக ஊடகங்களில் காணொளிகளின் வரத்து அதிகமாக இருப்பதற்கு காரணமும் அவை சுருங்கச் சொல்லி விரிவாக புரிய வைப்பது தான். அதுமட்டுமல்ல, இயல்பாக நடக்கும் விஷயத்தை சில நொடி வீடியோக்கள் சொல்லி மலைக்க வைக்கின்றன.

மலைக்க வைக்கும் வீடியோக்கள், சில சமயங்களில் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தினால், பல சமயங்கள் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றன.

அதிர்ச்சி, ஆச்சரியம், அதிசயம், சமயோஜிதம், வெறுப்பு, மோதல் என பலவிதமான உணர்வுகளை தோன்றச் செய்யும் வீடியோக்கள் வைரலாகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கே பல்பு கொடுத்த பறவை: 'பலே' என பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

தற்போது வெளியாகி சக்கைபோடு போடும் வீடியோக்களில் க்யூட்டான விலங்குகளின் வீடியோக்களும், வேட்டையாடும் டெரர் வீடியோக்களும் அடங்கும்.

ஆனால், க்யூட்டாகவும் டெரராகவும் உள்ள ஒரு பூனை வீடியோ சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் பரவலாக கவர்ந்துள்ளது.

 

 

இது காட்டில் நடைபெறும் சம்பவமல்ல, ஒரு நகரத்தின் சாலையில் பூனை நடத்தும் சாமர்த்தியமான வேட்டை வீடியோ இது. நில் - கவனி -கொல் என்ற தத்துவத்தைச் சொல்லும் புத்திசாலி பூனையின் வீடியோவாக இது பார்க்கப்படுகிறது.

பதுங்கிப் பாயும் டெக்னிக் வேட்டையின் ஒரு பரிணாமம் என்றால், பொறுத்திருந்து எலி வளையில் வரும் வரை காத்திருந்து லபக் என்று கவ்விச் செல்லும் பூனையின் இந்த வீடியோ ஆச்சரியத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க | அழாத உனக்கு நான் இருக்கேன்... குழந்தையை தேற்றும் பூனைக்குட்டி - வைரல் வீடியோ

சாலையில் ஒரு ஓட்டைக்குள் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்த எலியை, கவ்விக் கொண்டு துவம்சம் செய்யும் பூனையின் வீடியோ இது. 

இது டாம் அண்ட் ஜெர்ரி வீடியோவை தோற்கடிக்கும் புத்திசாலி பூனை அண்ட் எஸ்கேப் ஆக முடியாத எலி வீடியோ. 

வாழ்க்கை என்பது அடுத்த நொடியில் நமக்காக என்ன வைத்திருக்கும் என்ற தத்துவத்தை ஒரு சில நொடிகளில் நமக்கு உணர வைக்கும் பூனை-எலி வைரல் வீடியோ இது.

இந்த வீடியோவை பலரும் பார்த்து, பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் animals_powers என்ற இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பகிரப்படுகிறது. அவை வைரலும் ஆகின்றன.

மேலும் படிக்க | ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! ஆட்டுக்குட்டியிடம் வெயிட்டு காட்டும் பூனைக்குட்டி!

பூனையை கண்ட குழந்தையும் சிறிது நேரத்தில் தனது அழுகையை நிறுத்திவிடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரையும், அந்தக் குழந்தையை இந்தப் பூனை இரண்டாம் தாய் போல் பார்த்துக்கொள்கிறது என கூறி வீடியோவை பகிர்ந்துவருகின்றனர். இதனால் அந்த வீடியோ வைரலாகிவருகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News