பினை நிபந்தனையை மீறியதாக Wikileaks நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது!
உலக முழுவதும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களின் ஊழல் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இணைய பத்திரிக்கை Wikileaks. இப்பத்திரிக்கையின் நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சே-வின் அதிரடி முயற்சியால் அமெரிக்கவாவின் வேவு ரகசியங்கள் உலகம் முழுவதும் வெளியானது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலியன் ஆசாஞ்சேவை கைது செய்தது, இந்த வழக்கில் இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் சுவிடன் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் ஜூலியன் ஆசாஞ்சே மீது பாலியல் பலாத்காரம் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஜூலியன் ஆசாஞ்சேவை லண்டனில் வைத்து கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் திட்டம் தீட்டியது.
ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்த ஜூலியன் ஆசாஞ்சே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசிடம் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈக்வடார நாட்டு தூதரகத்திற்கு அகதியாக தஞ்சம் புகுந்தார்.
லண்டனில் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது பாலியல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஜாமின் பெற்று ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து அசாஞ்சே வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் பினை நிபந்தனைகளை மீறியதாக லண்டனின் உள்ள சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.