மசாஜ் செய்த பெண், மயங்கிய முதலை, ஏங்கிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Unbelievable Viral Video: சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. இது காண்பவர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 03:09 PM IST
  • விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
  • சமீப காலமாக, பல கொடூரமான வன உயிரினங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன.
மசாஜ் செய்த பெண், மயங்கிய முதலை, ஏங்கிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமீப காலமாக, பல கொடூரமான வன உயிரினங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. இதில் பயனர்கள் அவற்றின் அன்றாட வழக்கத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது. முதலைகள் தண்ணீரில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்கள். இவற்றிடம் ஒருவர் சிக்கிவிட்டால், அவரது உடலை ஒரு நொடியில் தங்கள் சக்தி வாய்ந்த தாடைகளால் துண்டு துண்டாக வெட்டி முழுவதுமாக விழுங்கிவிடும். 

சமீபத்திய நாட்களில் முதலையின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரிய முறையில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் ஒரு  வீடியோ வெளியானது. இது காண்பவர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது. அதில் ஒரு முதலை தரையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. பொதுவாக இப்படி ஒரு கொடூரமான மிருகத்தை தூரத்தில் கண்டாலே அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஆனால் இங்கு மிக வித்தியாசமான ஒரு காட்சியை காண முடிகின்றது. 

மேலும் படிக்க | ‘அப்படியே ஷாக் ஆய்ட்டேன்’: தாக்க வந்து, பல்பு வாங்கி ஓடியே போன கரடி, வைரல் வீடியோ

ஒரு பெண் அந்த முதலைக்கு மசாஜ் செய்வதை வீடியோவில் காண்கிோம். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இணைய பயனர்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இதனால் தான் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதலை மசாஜ் வீடியோவை இங்கே காணலாம்:

முதலையின் முதுகைத் தடவும் பெண்

அந்த வீடியோவில், ஒரு பெண் கொடூரமான ராட்சத முதலைக்கு அருகில் வந்து, பயப்படாமல் அதன் முதுகில் தடவிக்கொடுக்கிறார். ​​அந்த பெண் முதலையின் முதுகு மற்றும் கைகளை தடவிக்கொடுப்பதுடன், வாய்க்கு அருகிலும் மசாஜ் செய்வதும் காணப்படுகின்றது. இப்படி அவர் செய்யும்போது முதலை முற்றிலும் அமைதியாக இருக்கிறது. பென்ணின் முகத்திலும் அச்சத்தை காண முடியவில்லை. அதை பார்த்து அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

வீடியோவைப் பார்த்த பயனர்கள் அதிர்ச்சி

இந்த வைரலான வீடியோ @EpicVideosOnly என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை, இந்த வீடியோவுக்கு 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் 1500-க்கு மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கருத்துகளை அளித்து வருகிறார்கள். அழகான பெண்ணின் மசாஜால் முதலை மயங்கி விட்டதாக இணையவாசிகள் கூறி வருகிறார்கள். 

மேலும் படிக்க | வைரல் வீடியோ: கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு...உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சிய நபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News