குழந்தையை சுற்றி வளைத்த மலைப்பாம்பு, அங்கதான் ஒரு ட்விஸ்ட்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Python Video: உங்களுக்கு பலவீனமான இதயம் இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்காதீர்கள். திகிலூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2023, 01:37 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • இதயம் பலவீனமானவர்கள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டாம்.
குழந்தையை சுற்றி வளைத்த மலைப்பாம்பு, அங்கதான் ஒரு ட்விஸ்ட்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பயங்கரமானவையாகும். மேலும் அவை மக்களை உற்சாகப்படுத்தும் வகை உயிரினங்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். பாம்பு பயம் மிகவும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. இது முற்றிலும் இயற்கையானது. பாம்பின் புகைபடங்களும் வீடியோக்களும் கூட சிலரை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதுண்டு. பாம்புகளின் ஏராளமான வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பாம்புகளை தவிர்த்து அவற்றிடமிருந்து விலகி இருக்கவே பெரும்பாலும் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் விருப்பப்பட்டு இவற்றுடன் விளையாடுவதுமுண்டு. சிலர் தெரியாமல் சென்று மாட்டிக்கொள்வதுமுண்டு. 

சமீபத்தில் மிகப் பெரிய பாம்புடன் விளையாடும் ஒரு சீறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதயம் பலவீனமானவர்கள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டாம். பத்திரிக்கையாளர் LP Pant ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ திகிலூட்டும் வகையிலும் உள்ளது, அதே வேளையில் சுவாரசியமாகவும் உள்ளது. 

நெஞ்சை நடுங்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

வைரலான இந்த வீடியோ குறுநடை போடும் குழந்தை ஒன்று பெரிய மலைப்பாம்புடன் விளையாடுவது போல் தொடங்குகிறது. முதலில் அந்த குழந்தை அழுவது போல தோன்றினாலும், பின்னர்தான் குழந்தைக்கு எந்த வித பயமும் இல்லை, பாம்புடன் விளையாட குழந்தை ஆர்வமாக உள்ளது என்பது தெரிகிறது. 

மேலும் படிக்க | Viral Video: நடுரோட்டில் இப்படியா..அடுத்து என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ 

முதலில் பாம்பு குழந்தையை சுற்றி வளைந்துகொண்டு இருக்கிறது. அதிலிருந்து மீண்டும் வெளியே வந்த குழந்தை அங்கிருந்து ஓடி விடுவான் என பார்த்தால், சிறுவன், பாம்பின் வாய் பகுதிக்கு சென்று, வாயை பிடித்து அத்தனை நீண்ட பாம்புடன் விளையாடத் தொடங்குகிறான். இது காண்பவர்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றது. 

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு 30,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பெரிய மலைப்பாம்புடன் குழந்தையை விளையாட விட்டு, அதை வீடியோ எடுத்த நபர்களை பலர் விமர்சித்துள்ளனர். 

'வீடியோ எடுப்பதற்காக குழந்தையை இப்படி ஆபத்துக்கு ஆளாக்காதீர்கள்' என பெற்றோருக்கு சிலர் அறிவுரை வழங்கியுள்ளார்கள். "இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள், பாம்பு என்ன தவறு செய்தது...? கிரகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மதிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்" என ஒரு பயனர் பாம்புக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News