தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே (Samyukta Hegde). இவரும் இவர் நண்பர்களும் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து கவிதா ரெட்டி என்பவர், இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. கவிதா ரெட்டியுடன் அங்கிருந்து இன்னும் சிலரும் தன்னையும் தன் தோழிகளையும் தகாத முறையில் திட்டி இழிவுபடுத்தியதாகவும் சம்யுக்தா ஹெக்டே (Samyukta Hegde) தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சம்யுக்தா ஹெக்டே (Samyukta Hegde) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கு நடப்பவற்றை நேரலை செய்ய ஆரம்பித்தார். அதில் நான் வளையங்களை வைத்து பயிற்சி மேற்கொள்ள வந்தேன். வயதான பெண்மணி உள்ளிட்ட சிலர் எங்களை வெளியே போங்க. இது என்ன ஆபாசமான உடை என திட்டினர். என் தோழியையும் அந்த பெண்மணி தாக்கினார் என பேசிக்கொண்டிருந்த சம்யுக்தா, உடனடியாக தனது மேலாடையை கழட்டி, பாருங்கள் இது ஸ்போர்ட்ஸ் பிரா, ஸ்போர்ட்ஸ் டிராக் உடன் தான் பயிற்சி செய்தேன். இதில் என்ன தப்பு என கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக இரு தரப்பினருமே பெங்களூரு போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவருடைய தோழிகளிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கவிதா ரெட்டி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் காணொளியில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
I have always opposed Moral Policing. I realize that my actions were construed as such. An argument ended up in me reacting aggressively as well, it was a mistake. As a responsible citizen n progressive woman, I own up to n sincerely apologise to @SamyukthaHegde n her Friends! pic.twitter.com/pM9UJkWESC
— Kavitha Reddy (KR) Jai Bhim! (@KavithaReddy16) September 6, 2020
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.