திருவண்ணாமலையில் மணிக்கணக்கில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள்!

Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2024, 12:21 PM IST
  • விடுமுறை நாட்களில் திருவண்ணாமலையில் குவியும் மக்கள் கூட்டம்
  • அருணாச்சலேஸ்வரரை சந்திக்க பல மணி நேரம் காத்திருப்பு
  • அண்டை மாநில பக்தர்களின் வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலையில் மணிக்கணக்கில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள்! title=

Arunachaleswarar Darshan In Thiruvannamalai: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

arunachaleswar

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர், அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது, வழக்கமாக அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருவது வழக்கம்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது, அதே போன்று ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு அருணாச்சலேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் அபூர்வ யோகங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News