குரு வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு சுபமான நேரம், ராஜயோகத்தால் தலைவிதி மாறும்

Jupiter Retrograde: 3 ராசிகளுக்கு குருவின் வக்ர நிலை, அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். இப்போது, இந்த ராசிக்காரர்களுக்கு, வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 12:00 PM IST
  • தடைபட்ட பணிகள் இப்போது நடந்து முடியும்,
  • உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
குரு வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு சுபமான நேரம், ராஜயோகத்தால் தலைவிதி மாறும் title=

குருவின் வக்ர நிலை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள்களின் குருவான வியாழன் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார். அதாவது இந்த ராசியில் அவர் பிற்போக்கு இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். நவம்பர் 23 வரை அவர் இந்த ராசியில் இப்படியே சஞ்சரிப்பார். குருவின் வக்ர நிலை அனைத்து 12 ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிகளுக்கு இந்த வக்ர நிலை, அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். இப்போது, இந்த ராசிக்காரர்களுக்கு, வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம். 

தடைபட்ட பணிகள் இப்போது நடந்து முடியும்

கடகம்: 

வியாழன் கிரகத்தின் வக்ர நிலை கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். தொழில் சம்பந்தமாக நீண்ட பயணங்கள் ஏற்படலாம். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் பல தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் நிவாரணம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் உறுதியாக இருப்பீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், உத்தியோகத்தில் புதிய பொறுப்பு, பதவி உயர்வு அல்லது ஊதிய அதிகரிப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் பல புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்களும் நடக்கலாம்.

மேலும் படிக்க | செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட பிரகாசிக்கும் 

நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்

ரிஷபம்: 

வியாழனின் பின்னடைவு ரிஷப ராசிக்காரர்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் நிதிப் பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் விரிவடையும். பல பெரிய நிறுவனங்களின் ஆர்டர்களையும் பெறக்கூடும். இந்த வகர் நிலை காலத்தில் உங்களுக்கு புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: புரட்டாசியில் பட்டையை கிளப்ப உள்ள ராசிகள் இவை தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News