சுக்கிரன், சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு தீபாவளிக்கு முன் செல்வ மழை

Shani Shukra Gochar 2023: 2023 நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும், சனி, சுக்கிரன் போன்ற இரண்டு முக்கிய கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 22, 2023, 11:53 AM IST
  • சட்ட முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். பதவி உயர்வு உண்டாகும்.
  • பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை கூடும்.
சுக்கிரன், சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு தீபாவளிக்கு முன் செல்வ மழை  title=

நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவற்றில் சில கிரகங்கள் தங்கள் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் வாழ்வில் பெரிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும். சனி மற்றும் சுக்கிரன் போல் என்றே கூறலாம். செல்வம், ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி மற்றும் அன்புக்கு பொறுப்பான கிரகம் சுக்கிரன். அதேசமயம் சனி செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருபவர். சுக்கிரன் மற்றும் சனியின் அசுப பலன்கள் வாழ்க்கையை கஷ்டங்கள் மற்றும் வறுமையை ஏற்படுத்தும். இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பெரும் பண்டிகை என்பதால் அதற்கு முன்னதாக சனி, சுக்கிரன் நிலை மாற்றம் ஏற்படும். நவம்பர் 3 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறது. அதேசமயம் 4 நவம்பர் ஆம் தேதி 2023 அன்று சுக்கிரன் பெயர்ச்சியின் அடுத்த நாளான சனி வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறது. சுக்கிரனின் சஞ்சாரமும், சனியின் வக்ர நிவர்த்தியும் தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் லக்ஷ்மி தேவியில் சிறப்பு அருள் கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தீபாவளிக்கு முன் பிரகாசிக்கும்:

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள்  பணம் சம்பாதிப்பார்கள். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் பல இனிமையான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன் லட்சுமி தேவியின் அபரிமிதமான அருளைப் பெறுவார்கள். நீங்கள் நிறைய பணம் பெறலாம். கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. பொருளாதார நிலை வலுப்பெறும். சட்ட முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். பதவி உயர்வு உண்டாகும்.

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன்னதாக சனி, சுக்கிரன் சஞ்சாரம் (Shani Margi Shukra Gochar 2023 November) செய்வதால் பெரிதும் நன்மை அடைவார்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign): தீபாவளிக்கு முன் சுக்கிரன் மற்றும் சனியின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மகர ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | சனி உச்சம் பெறுகிறார்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News