Pongal 2023: பொங்கலுக்கு முன் இந்த ராசிகளுக்கு லாட்டரி, திடீர் பணவரவு வரும்

Pongal 2023 Date : ஆண்டு முழுவதும் வரும் பாண்டிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதற்கு முன்னதாக 3 ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 12, 2023, 05:02 PM IST
  • பொங்கல் ராசி பலன் 2023.
  • இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.
  • லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
Pongal 2023: பொங்கலுக்கு முன் இந்த ராசிகளுக்கு லாட்டரி, திடீர் பணவரவு வரும் title=

பொங்கல் பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியமான படிக்கையாகக் கருதப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் செயல்முறையே பொங்கல் எனப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு சூரியன் மகர ராசியில் ஜனவரி 15 ஆம் தேதி பெயர்ச்சியடைவதால் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கிடையில் ஜனவரி 13 ஆம் தேதி உதயமாக இருக்கும் புதன், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்களைத் தரப் போகிறார். இதன் போது இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேஷ ராசி: ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 13ஆம் தேதி புதன் உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கும். இதன் போது இந்த ராசிக்காரர்களுக்கு தாயின் முழு ஆதரவும் கிடைக்கும். ​​ஒரு சிறப்பு நண்பரின் வருகை பற்றிய தகவலைப் பெறலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். மேலும், இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.  

மேலும் படிக்க | சனியின் ராசியில் சூரியன்; 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம்

கடக ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் சுப பலன்களை அளிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் சுகபோககங்கள் அதிகரிக்கும். தாயின் முழு ஆதரவும் கிடைக்கும். புதன் உச்சம் பெறுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பண ஆதாயத்திற்கான அறிகுறிகளும் உள்ளன.

மிதுன ராசி: ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் நன்மைகள் நிறைந்ததாக இருக்கும். புதன் உச்சம் பெறுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதாக செய்திகள் வரலாம். பணி மாறுதல் காரணமாக இடமாற்றம் செய்ய நேரிடலாம். வியாபாரத்துக்காக போட்ட திட்டம் நிறைவேறும்.

துலாம் ராசி: புதனின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இதன் போது சமயப் பணிகளில் ஈடுபடலாம். இதனுடன் துலாம் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் சுகபோகமும் மகிழ்ச்சியும் பெருகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி, பொங்கல் ராசிபலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News