தீபாவளியன்று உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்!!

Diwali 2023 Lucky Zodiac Signs: கஜகேசரி யோகம் பல ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். இவர்களுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2023, 08:49 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு தீபாவளியன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் அதீத நற்பலன்களை தரும்.
  • இவர்கள் வருமான ரீதியாக மிகப்பெரிய பலனைப் பெறுவார்கள்.
  • பணத்துடன் மரியாதையையும் பெறுவார்கள்.
தீபாவளியன்று உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்!! title=

தீபாவளி 2023 அதிர்ஷ்ட ராசிகள்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகளால், சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. கிரக மாற்றங்கள் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அனைவராலும் அதிகப்படியான மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் ஒரு அற்புதமான ஜோதிட நிகழ்வும் நடக்கவுள்ளது. 

தீபாவளியுடன் கஜகேசரி ராஜயோகத்தின் அபூர்வ சேர்க்கையும் இந்த ஆண்டு இருக்கும். ஜோதிடத்தில் கஜகேசரி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், தீபாவளி போன்ற விசேஷ நாளில் கஜகேசரி ராஜயோகம் அமைவது மிகவும் நன்மை பயக்கும். இந்த ஆண்டு தீபாவளியன்று குரு மற்றும் சந்திரன் இணைவது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

கஜகேசரி யோகம் என்றால் என்ன? 

சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் இருந்தால், யானையைப் போல பலசாலிகளாகவும் சிங்கத்தைப் போன்ற எதையும் கண்டு அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

தீபாவளி அன்று உருவாகும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மேலும், இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். இவர்களுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? யாருடைய அதிர்ஷ்டம் தீபாவளி முதல் பிரகாசிக்கப் போகிறது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

தீபாவளி முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அமோகமாக இருக்கும்

ரிஷப ராசி (Taurus): 

ரிஷப ராசிக்காரர்களுக்கு தீபாவளியன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் அதீத நற்பலன்களை தரும். இவர்கள் வருமான ரீதியாக மிகப்பெரிய பலனைப் பெறுவார்கள். திடீர் வருமானம் கூடும். பணத்துடன் மரியாதையையும் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து வரும் வருமானம் வங்கி இருப்பை அதிகரிக்கும். அதிக ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். ஆபத்தான முதலீடு கூட லாபம் தரும்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள்

மிதுன ராசி (Gemini): 

மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அனுகூலமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தின் அடிப்படையில் பெரிய நன்மைகளைப் பெறலாம். வியாபாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பெரிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பதவியும் கௌரவமும் அதிகரிக்கும். புதிய வேலைகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள். இந்த நேரம் தொழிலுக்கு மிகவும் நல்லது.

தனுசு ராசி (Sagittarius): 

தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் பொருள் மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் புதிய வீடு, கார் அல்லது வேறு ஏதேனும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். வியாபாரத்திலும் பெரிய வெற்றியை பெறலாம். பணியிடத்தில் குறைந்த வேலை அழுத்தம் காரணமாக, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் அல்லது சொத்து சம்பந்தமான வேலைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி, ராகு, கேதுவின் அருள் மழை: தீபாவளி முதல் இந்த ராசிளுக்கு நல்ல காலம்.. வெற்றி மேல் வெற்றி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News