செவ்வாய் பெயர்ச்சி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள்

Mars Transit: தீபாவளிக்கு பின்னர் செவ்வாயில் நடக்கும் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2023, 05:42 PM IST
  • செவ்வாயின் ராசி மாற்றத்தால் புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
  • சொத்தில் முதலீடு செய்யலாம்.
  • தாயுடன் வாக்குவாதம் வரலாம்.
செவ்வாய் பெயர்ச்சி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள் title=

செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: செவ்வாய், நவம்பர் 16, 2023 அன்று காலை 10.03 மணிக்கு விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களின் சேனாதிபதியாக பார்க்கப்படுகிறார். நிலம், சக்தி, ஆற்றல், துணிச்சல் ஆகிய பண்புகளின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். செவ்வாய் மகரத்தில் உச்சத்திலும் கடகத்தில் நீச்சமாகவும் உள்ளார். 

தீபாவளிக்கு பின்னர் செவ்வாயில் நடக்கும் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் மாற்றமும் 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு மிக நல்ல விளைவுகள் இருக்கும், சிலருக்கு சில எச்சரிக்கைகள் தெரியும். செவ்வாய் ராசி மாற்றத்தால் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி (Aries)

வாகனம் ஓட்டும்போது சிறப்பு கவனம் தேவைப்படும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் செவ்வாய் பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். செவ்வாயின் இந்த ராசி மாற்றம் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆனால் அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. நீங்கள் ஜோதிடம் அல்லது அது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தால், இப்போது நேரம் நன்றாக இருக்கும்.

மிதுன ராசி (Taurus) 

செவ்வாய் உங்கள் எதிரிகளை அமைதிப்படுத்துவார். உங்களை ஏமாற்றும் நபர்களுக்கு சரியான பாடம் புகட்டுவீர்கள். இப்போது முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தந்தையுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

சிம்ம ராசி (Leo)

செவ்வாயின் ராசி மாற்றத்தால் புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சொத்தில் முதலீடு செய்யலாம். தாயுடன் வாக்குவாதம் வரலாம். அந்த வேளையில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உங்கள் மனைவியுடனான உறவில் கசப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | சனி, ராகு, கேதுவின் அருள் மழை: தீபாவளி முதல் இந்த ராசிளுக்கு நல்ல காலம்.. வெற்றி மேல் வெற்றி!!

கன்னி ராசி (Vigro)

செவ்வாய் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். உடன்பிறந்தவர்களின் ஆதரவையோ எதிர்ப்பையோ சந்திக்க வேண்டியிருக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.

துலா ராசி (Libra)

செவ்வாய் உங்களுக்கு குடும்பம், குழந்தைகள் மற்றும் தொழில் தொடர்பான அமைதியின்மையைத் தரக்கூடும். இருப்பினும் இது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் சாமர்த்தியத்தால் இதை சரி செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டிய நிலை ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

விருச்சிக ராசி (Scorpio)

செவ்வாய் உங்களை வலிமையாகவும் நம்பிக்கை மிக்கவராகவும் ஆக்குவார். குறிப்பாக ராணுவ படைகளில் இருக்கும் வீரர்கள் பயனடைவார்கள். செவ்வாயின் தாக்கதால் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் சட்ட சிக்கல்கள் தீரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 

மகர ராசி (Caprocorn)

உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் தர செவ்வாய் வருகிறார். சொத்து முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். இது ஒரு பெரிய வருமான ஆதாரமாக மாறும். உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு அதிகாரம் இருக்கும். அனைவருக்கும் பிடித்த நபராக இருப்பீர்கள். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்... கை வைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News