செப்டம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும், செல்வம் கொழிக்கும்

Lucky Zodiac Signs of September: 4 ராசிக்காரர்கள் இந்த மாதம் பல வித நற்பலன்களை பெறுவார்கள். இவர்கள் பண மழையில் நனையக்கூடும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2023, 01:28 PM IST
  • செப்டம்பர் 2023 மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமாக இருக்கும்.
  • தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை செய்வீர்கள்.
  • இது உங்களின் நம்பிக்கையை அதிகரித்து, வாழ்க்கையை எளிதாக்கும்.
செப்டம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும், செல்வம் கொழிக்கும் title=

செப்டம்பர் மாத அதிர்ஷ்ட ராசிகள்: பண்டிகைகள் மற்றும் கிரக இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இம்மாதம் செவ்வாய், குரு, சூரியன் உள்ளிட்ட 5 கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாறப்போகிறது. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றங்களால் சிலருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். எனினும், 4 ராசிக்காரர்கள் இந்த மாதம் பல வித நற்பலன்களை பெறுவார்கள். இவர்கள் பண மழையில் நனையக்கூடும், ஏனெனில் இந்த மாதம் இவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக செப்டம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில், இவர்களது அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்து முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

செப்டம்பர் மாதத்தில் ஏற்படப்போகும் கிரக மாற்றங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் குரு ராகுவின் ஸ்தானத்தாலும் செவ்வாயின் அம்சத்தாலும் மக்கள் மரியாதை பெறுவார்கள். புகழ் உயரும். இத்துடன் உங்கள் காதல் வாழ்க்கையும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமும் ஒத்துழைப்பும் இருக்கும். யாருடனும் தகராறில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிவடையும். தேவையான பல எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். பொருளாதார விஷயங்களிலும் இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் பண வரவு அதிகமாகும், நிதி நிலை நன்றாக இருக்கும். 

கன்னி ராசி 

செப்டம்பர் 2023 இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள், ஆனால் நீங்கள் அவர்களை எளிதாக கையாளுவீர்கள். செவ்வாய் உங்களுக்கு சுபமான நல்ல வாய்ப்புகளைத் தருவார். அதே நேரத்தில் குரு பகவானின் சுப பலன்கள் உங்கள் வேலையை செழிக்க வைக்கும்.

மேலும் படிக்க | கன்னியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சத்ருஹந்த யோகம் - வீடு தேடிவரும் அதிர்ஷ்டம்

துலா ராசி

செப்டம்பர் மாதம் துலா ராசியினருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை அடைய முடியும். பணி மாறுதல் வேண்டும் என நினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண விஷயங்கள் இனிமையாக இருக்கும். மேலும் உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மகர ராசி

செப்டம்பர் 2023 மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை செய்வீர்கள். இது உங்களின் நம்பிக்கையை அதிகரித்து, வாழ்க்கையை எளிதாக்கும். உங்கள் மனம் முழு நம்பிக்கையுடன் இருக்கும். பண வரவு இப்போது அதிகரிக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் தொடங்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாய் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்கள் குழந்தைக்கு கிருஷ்ணர் வடிவம் கொடுக்க இந்த 6 பொருட்கள் அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News