ஜாதகத்தின்படி உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்? குணங்களை சொல்லும் கிரக பலன்!

Life Partner Prediction In Horoscope : ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்களை வைத்து வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2024, 03:23 PM IST
  • வாழ்க்கையை மட்டுமல்ல, வாழ்க்கைத்துணையையும் முடிவு செய்யும் சுக்கிரன்
  • ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரன்
  • வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லும் கிரகம்
ஜாதகத்தின்படி உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்? குணங்களை சொல்லும் கிரக பலன்! title=

இளைஞர்களின் வாழ்க்கையில் காதல் கல்யாணம் போன்ற விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தனக்கு வரப்போகும் கணவர் / மனைவியின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகவும் இருப்பதை பார்க்கலாம். உண்மையில், நமது ஜாதக கட்டங்களே, வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார், அவரது குணம் என்னவாக இருக்கும் என்பவற்றை சொல்லிவிடும். 

லக்னத்தில் இருந்து 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் உள்ள கிரகங்களின் குணங்களை வைத்து வர இருக்கும் வாழ்க்கைத் துணையின் குணங்களை தெரிந்து கொள்ளலாம். இதில் சுக்கிரனின் பங்கு மிகவும் முக்கியமனது. வாழ்க்கையில் சுகபோகமும் நிம்மதியும், தாம்பத்திய உறவையும் முடிவு செய்பவர் சுக்கிரன் தான்.

எனவே ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்களை வைத்து வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.

சூரியன் சுக்கிரன் இணைவு
உங்கள் ஜாதகத்தில் இந்த நான்கு கட்டங்களில் ஏதேனும் ஒன்றில், சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் உங்கள் வாழ்க்கைத்துணை வசதியான குடும்பத்தில் இருந்து வருவார் என்பதும், மன்னித்து பொறுத்துப் போகும் குணம் உடையவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

மேலும் படிக்க | புதனுக்கு அதிதேவதையான விஷ்ணு, திருப்பதியில் கடனாளியாக அமர்ந்திருக்க காரணம் யார்?

சுக்கிரன் சந்திரன் இணைவு
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனுடன் சந்திரன் இணைந்திருந்தால், ஜாதகருக்கு வரும் வாழ்க்கைத்துணை சொந்தங்களில் இருந்து வரமாட்டார், வெளியிடத்தில் இருந்து வருவார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல, மாமியாருடன் ஒத்துப் போகாத நிலையில் வாழ்க்கைத் துணை இருப்பார்.
 
சுக்கிரன் செவ்வாய் இணைவு
ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், வாழ்க்கைத்துணை ரத்த சொந்தத்தில் இருந்து வருவார். நேர்மையானவராக இருப்பார், தைரியசாலியாகவும் பிறர் முன்பு தலைகுனியாதவராகவும் இருப்பார். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும். இதய நோய்கள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

சுக்கிரன் புதன் இணைவு
ஜாதகத்தில் சுக்கிரனும் புதன் கிரகமும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், ஜாதகருக்கு வரும் வாழ்க்கைத்துணை அதிக புத்திசாலியாக இருப்பார், அனைவரையும் சமமாக நடத்துவார். கஷ்டங்களை சமாளித்து திறமையுடன்,  பேச்சாற்றல் கொண்டவராகவும் இருப்பார். வாதம் செய்வதில் திறமையானவராக இருப்பதால், நீங்கள் கொஞ்சம் அமைதி காக்க வேண்டியிருக்கும்.

சுக்கிரன் குரு இணைவு
ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், ஜாதகருக்கு வரும் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நல்ல ஆலோசனை வழங்கும் மதியூகியாகவும், வாழ்க்கைத்துணையை மரியாதையாக நடத்துபவராகவும் இருப்பார்.  

மேலும் படிக்க | சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன், சிம்ம ராசியினரையே படுத்தி எடுப்பார்! 6 ராசிகளுக்கு எச்சரிக்கை!

சுக்கிரன்  சனி இணைவு
ஜாதகத்தில் சுக்கிரனும் சனியும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், ஜாதகருக்கு வரும் வாழ்க்கைத்துணை வேலை செய்து சம்பாதிப்பவராகவும் உழைப்பாளியாகவும் இருப்பார். பணம் சம்பாதிப்பதில் ஆசை இருக்கும் அதேநேரத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும்.  

சுக்கிரன் ராகு இணைவு

ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், வாழ்க்கைத்துணை சாதாரண குடும்பத்தில் இருந்து வருவார், ஆனால் களையாக லட்சணமாக இருப்பார். வாழ்க்கைத்துணையின் வரவால் ஜாதகருக்கு வாகன லாபம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் அதிக ஆசை இருப்பவராகவே வாழ்க்கைத்துணை இருப்பார்.

சுக்கிரன் கேது இணைவு
ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தால், ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் இருப்பவராகவோ அல்லது கிராமத்தில் வசிப்பவராகவோ இருப்பார். பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்றாலும், ஒழுக்கமானவராகவும், நேர்மைக்கு பிறப்பிடமாகவும் இருப்பார். தர்ம சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News