ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்ல, அதனால் ஏற்படும் கிரகங்களின் சந்திப்பு, கிரகங்களின் உதயங்கள், கிரகங்களின் அஸ்தமனங்கள், கிரகங்களின் வக்கிர பெயர்ச்சிகள் ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், ஞானத்தை அள்ளி வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் 26 ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும். மேஷ ராசியில் குரு பகவான் வீற்றிருக்கும் நிலையில், குரு பகவானும் புதனும் இணைவார்கள். இதனால் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள், புத பகவானின் அருளுடன், குரு பகவானின் அருளையும் பெற்று, தொழிலில் வேலையில் முன்னேற்றத்தை காண்பார்கள். புதன் பெயர்ச்சியினால், ஜாக்பாட் பலன்களை பெற உள்ள ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி (Gemini Zodiac Sign)
மிதுன ராசியினருக்கு, புதன் பெயர்ச்சியினால் ஏற்படும் புதன் குரு பகவான் சேர்க்கை, வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்களும் உருவாகும். திட்டமிட்டபடி பணிகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்தியை பெறலாம். முதலீட்டின் மூலம் லாபம் பெறவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் கனவுகளை நினைவாக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்ம ராசி (Leo Zodiac Sign)
சிம்ம ராசியினருக்கு முதன் பெயர்ச்சியினால் ஏற்படும் குரு பகவான் புதன் சேர்க்கை, அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். இதனால் வரை தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்ல முயற்சி அவர்களுக்கு வாய்ப்புகள் கைக்கூடி வரும். நிறைவேறாத விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடக ராசி (Cancer Zodiac Sign)
கடக ராசியினருக்கு புதன் பெயர்ச்சியினால் ஏற்படும் குரு புதன் சேர்க்கை, சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும். வேலையில் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறலாம். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவுடன் திட்டமிட்டபடி பணியை நிறைவு செய்வீர்கள். இதனால் பாராட்டுக்களும், சலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தில் சூழ்நிலை நிலவும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை மேம்படும். சேமிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் ராசி (Libra Zodiac Sign)
துலாம் ராசியினருக்கு, புதன் பெயர்ச்சியினால் ஏற்படும் புதன் குரு சேர்க்கை, அற்புதமான பலன்களை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்திருக்கும். வேலையில் இருப்பவர்கள், கூடுதல் பொறுப்புகளையும், கூடுதல் ஆதாயங்களையும் பெறுவார்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கும் ஆர்வம் பெருகும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். பணத்திற்கு குறைவிருக்காது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். மாணவர்கள் தேர்வினை சிறப்பாக எழுதுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ