12 ஆண்டுக்கு பிறகு ரிஷப ராசி குரு பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

Jupiter Transit Taurus: தேவர்களின் குருவான வியாழன் கூறிய விரைவில் அதாவது மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அப்படிப்பட்ட நிலையில் எந்த 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 17, 2024, 05:55 PM IST
  • பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்தியைப் பெறலாம்.
  • புதிய வேலை வெற்றி பெறலாம்.
  • வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.
12 ஆண்டுக்கு பிறகு ரிஷப ராசி குரு பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும் title=

Jupiter Transit Taurus 2024: கடவுள்களின் குருவான வியாழன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றும். குருவின் ராசி மாற்றம் நிச்சயமாக 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் விழாயன் இன்னும் 45 நாட்களில் பெயர்ச்சியடையப் போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் (Guru Gochar 2024) பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால், வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் எந்த 3 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

ரிஷபம் (Taurus Zodiac Sign):
குரு இந்த ராசியின் லக்ன வீட்டிற்குள் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன் தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் வலுவாகும். இதனுடன், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் வலுவாக வாய்ப்புகள் உள்ளன. தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புனித யாத்திரைக்கு செல்லலாம். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்தியைப் பெறலாம்.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க... உங்கள் ராசிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுங்க!

மகரம் (Capricorn Zodiac Sign):
மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மிகவும் பயனுள்ள பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை மட்டுமே பெறுவீர்கள். உயர்கல்வி கனவு நனவாகும். இதனுடன், மதம், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தேவகுருவின் ஆசியுடன் திருமணம் நிச்சயிக்க முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கடின உழைப்பின் பலன் கிடைக்கும். உயர் அதிகாரியிடம் ஆதரிக்கும். பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வெற்றி பெறலாம். 

கும்பம் (Aquarius Zodiac Sign):
கும்ப ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறலாம். குரு நான்காவது வீட்டில் பெயர்ச்சி அடையப் போவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் பெறலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். சமய காரியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமான பலனைத் தரும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த வாரத்திற்கான உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News