தீபாவளியை தொடர்ந்து வரும் சூரிய கிரகணம்: பம்பர் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் இவைதான்

Solar Eclipse 2022: சூரிய கிரகணம் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 20, 2022, 10:31 AM IST
  • இந்த சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற்றுத் தரும்.
  • பண வரவு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
தீபாவளியை தொடர்ந்து வரும் சூரிய கிரகணம்: பம்பர் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் இவைதான் title=

இந்தியாவில் சூரிய கிரகணம் - தேதி மற்றும் நேரம்: 25 அக்டோபர் 2022, செவ்வாய் அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த கிரகணம் துலாம் ராசியில் நடக்கவுள்ளது. சூரியனைத் தவிர, சுக்கிரன், கேது, சந்திரன் ஆகிய கிரகங்களும் கிரகண நேரத்தில் துலாம் ராசியில் இருக்கும். இந்த காரணத்தினால், இந்த சூரிய கிரகணம் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். இந்த சூரிய கிரகணம் எந்தெந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசியில் சூரிய கிரகணத்தின் விளைவு

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண வரவு சாதகமாக இருக்கும். நிலம், சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்ம ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம்

இந்த சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற்றுத் தரும். பண வரவு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்ற வடிவங்களில் பெறலாம். வீட்டின் இளைய உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். சிக்கலான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, எச்சரிக்கை தேவை 

தனுசு ராசியில் சூரிய கிரகணத்தின் விளைவு

தனுசு ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் சூரிய கிரகணத்தால் அதிகப் பணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமையுடன், உங்கள் ஆளுமையிலும் சாதகமான மாற்றம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் கருத்தை சரியான வழியில் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். பிறருக்கு வழிகாட்டும் விதத்தில் நடந்துகொள்வீர்கள். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.

மீன ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம்

மீன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நல்ல பலனைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். திட்டமிட்டு முன்னேறினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொறுமையாக இருந்தால் பல நன்மைகளை பெறுவீர்கள். இது உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News