ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிகள் கவனமாக இருக்கவும்... சவால்கள் காத்திருக்கின்றன!

Grah Transit 2023: நடப்பு ஏப்ரல் மாதத்தில் சில கிரகங்களின் இடபெயர்வு உள்ளதால், ஒரு சில ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 5, 2023, 03:24 PM IST
  • சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்கள் இடம்பெயர்கின்றன.
  • மேலும், வியாழன் இந்த மாதத்திலேயே உதயமாகி மறையவும் உள்ளது.
  • இதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசியினருக்கும் காணப்படும்.
ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிகள் கவனமாக இருக்கவும்... சவால்கள் காத்திருக்கின்றன! title=

Grah Transit 2023: ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இவ்வாறான சூழ்நிலையில், கிரகங்களின் மாற்றங்களை அனைவரும் கண்காணித்து வருகின்றனர். இந்த மாதத்தில் பல பெரிய கிரகங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறப் போகின்றன.

வரும் ஏப்.14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியிலும், ஏப்.21 ஆம் தேதி புதன் மேஷ ராசியிலும், பின்னர் வியாழன், ஏப். 22ஆம் தேதி பயணிக்கின்றனர். இதன் பிறகு, வியாழன் உதயமாகி மறையும். அப்போது, பல கிரகங்களின் சேர்க்கை இருக்கும். அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசியினருக்கும் காணப்படும். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

சிம்மம்

ஜோதிட சாஸ்திரப்படி, ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி சில ரகசிய எதிரிகள் உங்கள் வேலையில் தடைகளை உருவாக்குவார்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலகட்டத்தில் அதைத் தவிர்க்கவும். கிரகங்களின் தாக்கம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பொருளாதார எழுச்சியை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.

மேலும் படிக்க | குரு - ராகு சேர்க்கையில் 3 ராசிகளுக்கு சண்டால யோகம்! கவனமாக இருப்பது அவசியம்

துலாம்

இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக நடக்க வேண்டும். உடன்பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். ஆனால் எந்த விதமான வாக்குவாதத்தையும் தவிருஙகள். அதுமட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதம் பாதகமான பலன்களை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில் பண இழப்பு ஏற்படலாம். அதுமட்டுமின்றி, பெற்றோரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பங்குதாரர் விஷயத்தில் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உரையாடல் மூலம் சூழ்நிலையை கையாள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடும். பயணத்தின் போது கவனமாக இருங்கள்.

மகரம்

ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தப்போகிறது. மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் எண்ணம் வரலாம். இக்காலகட்டத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்பாடு குறைவதால் அதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். உங்கள் திருமண வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள், வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இன்னும் 15 நாட்கள்..இந்த ராசிகளுக்கு குவியப்போகும் மலையளவு பிரச்னை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News