குரு பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும்

2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குருவின் பயணம் மற்றும் பார்வைகளால் யாருக்கெல்லாம் ப்ரமோஷன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 13, 2022, 03:43 PM IST
  • உங்களுடைய தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
  • குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும்.
குரு பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் title=

குரு பகவான் நவம்பர் 23 ஆம் தேதியன்று மீன ராசியில் வக்கிர நிலையில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். அதேபோல் ஜனவரி மாதம் முதல் குருவின் பயணம் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும், மேலும் ப்ரமோஷன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: உங்களுடைய தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. அதேபோல் வேலையில் ப்ரமோஷன் தருவார் குரு பகவான். 

ரிஷபம்: தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். 

மேலும் படிக்க | செவ்வாய், புதன் மாற்றம்: சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கோ வீழ்ச்சி, முழு ராசிபலன் இதோ 

மிதுனம்: மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வீடு நிலம் வாங்கலாம்.

சிம்மம்: குரு பகவான் கோடி நன்மைகளை தருவார். சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். 

கன்னி: நல்ல வேலை கிடைக்கும். வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். சுப விரைய செலவுகள் ஏற்படும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்: 2023ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். சம்பளம் உயர்வு கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். 

தனுசு: குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

மகரம்: புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்: உங்களின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 

மீனம்: வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் ப்ரமோஷன் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். குரு பெயர்ச்சியால் பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது. அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News