6 ராசிக்காரர்களுக்கு தனலாபத்தைக் கொடுக்கும் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி

Mercury And Mars Transit 2022: நவம்பர் 13ஆம் தேதி முதல் வக்ர கதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ள செவ்வாயும், அதே நாளில் வேறு ராசிக்கு சஞ்சரிக்கும் புதனும் 6 ராசிகளுக்கு தங்கள் அருட்கடாட்சத்தை பணமாய் அள்ளிக் கொடுக்கவிருக்கிறார்கள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2022, 12:13 AM IST
  • நவம்பர் 13ஆம் தேதி இரண்டு கிரகங்களின் பெயர்ச்சி
  • வக்ர கதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளார் செவ்வாய்
  • நவம்பர் 13 புதன் பெயர்ச்சி
6 ராசிக்காரர்களுக்கு தனலாபத்தைக் கொடுக்கும் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி  title=

செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி நவம்பர் 13: நவம்பர் 13ஆம் தேதி முதல் வக்ர கதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளார் செவ்வாய் பகவான். செவ்வாய், சிவப்பு கிரகம், அக்டோபர் 30 அன்று வக்ர கதியில் அதாவத் கடிகார சுற்றுக்கு எதிராக இயங்கத் தொடங்கினார். நவம்பர் 13 மதியம் 01:32 மணிக்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் 2023 ஜனவரி 13 வரை ரிஷப ராசியில் இருப்பார். அதேபோல, நவம்பர் 13ம் தேதியன்று, விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த இரு கிரகங்களும் ஒரே நாளில் பெயர்வதால், பல்வேறு கிரகங்களுக்கும் பாதிப்பும், சாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் சிலருக்கு பண விஷயத்தில் அனுகூலமாக இருக்கப் போகிறது. 

தகவல் தொடர்பு, பேச்சு, புத்திசாலித்தனம், அனிச்சை போன்றவற்றின் அதிபதியான புதன், செவ்வாய்ப் பெயர்ச்சியாகும் அதே நாளில், அதாவது நவம்பர் 13ம் தேதியன்று விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய்ப் பெயர்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 மணி நேரம் கழித்து புதன் பெயர்ச்சி நடைபெறும். இரவு 09:06 மணி அளவில் புதன் பெயர்ச்சி ஆகிறார்.  

செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி 6 ராசிக்காரர்களுக்கு தனலாபத்தைக் கொடுக்கும்.  

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்! 

ரிஷபம்: செவ்வாய் மற்றும் புதன் சஞ்சாரத்தால், ரிஷப ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைய முடியும். வியாபாரத்தில் தொடர்புடைய ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், இந்த நேரத்தில் ஆரோக்கியம் மேம்படும். ரிஷபம் ராசியில் வேலை செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடகம்: செவ்வாய் மற்றும் புதனின் இந்த பெரிய கிரக சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள். கடந்த சில நாட்களாக நீங்கள் உழைத்து வரும் கடின உழைப்புக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பலன் கிடைக்கும். மேலும், உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் செவ்வாய்ப் பெயர்ச்சி மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களையும் நீங்கள் காண்பீர்கள், இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலம் இது.  

மேலும் படிக்க | விருச்சிகத்தில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மிநாராயண யோகம் பெறும்‘3’ ராசிகள்!

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புதன் சஞ்சாரத்தால் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த நேரத்தில் குடும்பச் சூழல் அமைதியாகவும் இணக்கமாகவும் இருக்கும். மேலும், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள்.

மகரம்: இந்த இரண்டு பெயர்ச்சிகளும் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. மகர ராசியை சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி போட்டித் தேர்வுகளில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான காலம் இது

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் செவ்வாய்ப் பெயர்ச்சிகள் நல்ல செய்திகளைத் தரும். வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள் மற்றும் பணியிடத்தில் சாதகமான முடிவுகளை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News