பிரதோஷம் அன்று இந்த பரிகாரத்தை செய்தால் சிவபெருமான் அருள் கிடைக்கும்!

பிரதோஷ தினத்தில் மாலை நேரத்தில் சில தோஷ பரிகாரத்தை செய்தால் சிவபெருமான் அருள் கிடைத்து, உங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி அருள்புரிகிறார்.

Written by - RK Spark | Last Updated : Jul 3, 2024, 03:32 PM IST
  • இன்று ஆஷாடத்தின் முதல் பிரதோஷ விரதம்.
  • இது புத்ர பிரதோஷம் என்று அழைக்கப்படும்.
  • பிரதோஷ காலத்தில் சில நடவடிக்கைகள் வாழ்க்கையை மாற்றும்.
பிரதோஷம் அன்று இந்த பரிகாரத்தை செய்தால் சிவபெருமான் அருள் கிடைக்கும்! title=

இந்து புராணங்களின் படி, ஒவ்வொரு மாதமும் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கிருஷ்ண பக்ஷ மற்றும் சுக்ல பக்ஷா என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு கட்டங்களின் திரயோதசி திதி சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த இரண்டு தேதிகளிலும் சிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இதன் மூலம் நாம் வேண்டிய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆஷாத் கிருஷ்ண பக்ஷத்தின் பிரதோஷ விரதம் இன்று ஜூலை 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த பிரதோஷம் புதன் கிழமை வருவதால் புத பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!

புத்திர பிரதோஷ நாளில் சில சடங்குகளுடன் வழிபாடு செய்வது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும். மேலும் உங்களின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவுகிறது. பிரதோஷ விரத வழிபாட்டின் முக்கியத்துவம் பிரதோஷ காலத்திலேயே உள்ளது. இன்று, ஜூலை 3ம் தேதி பிரதோஷ காலம் இரவு 7:23 முதல் 9:24 வரை ஆகும். இந்த பிரதோஷ விரத வழிபாடு செய்ய 2 மணி 1 நிமிடம் கிடைக்கும். இந்த நேரத்தில் முறையான சடங்குகளுடன் சிவபெருமானை வழிபட்டால் நினைந்து எல்லாம் நடக்கும்.
 
எப்படி பிரதோஷ வழிபாடு செய்வது

பிரதோஷ விரத வழிபாட்டின் போது, மாலை நேரத்தில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு, வெண்ணிற ஆடைகளை அணிய வேண்டும். பிறகு சிவபெருமானை நல்ல மனதுடன் வணங்கி உங்களது விருப்பங்களை அவர்முன் வைக்கலாம். பூஜையில் பூக்களையும் வைத்து வணங்கலாம். வழிபாட்டின் போது சிவன் மற்றும் பார்வதியின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 'ஓம் உமாமஹேஸ்வராப்யாம் நம' மற்றும் 'ஓம் கௌரிசங்கராய நம' ஆகிய மந்திரங்களை உச்சரிக்கலாம். உங்களால் நீங்கள் பிரதோஷ விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், நாள் முழுவதும் சைவ உணவை மட்டும் சாப்பிட்டு மாலையில் வழிபடலாம்.

புதனின் தோஷங்களில் இருந்து விடுபடுவீர்கள்

புத பிரதோஷ விரதத்தில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் புதன் தொடர்பா அனைத்து பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும். சிவபெருமானை வழங்குவதால் அறிவு அதிகரிக்கிறது. மேலும் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. வியாபாரம் தொடர்பான விஷயங்கள் நல்லதாக நடக்கும். உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமடைகின்றன. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தனிப்பட்ட முயற்சிகளில் சிறந்து விளங்குவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறையான செயல்களில் முன்னேறும் இருக்கும். மேலும் உங்கள் நினைவாற்றல் பலப்படுத்தப்படும். நீங்கள் அனைவருடனும் நல்ல உறவை வளர்ப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல்கள், பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | Rasipalan: குரோதி ஆண்டு ஆனி மாதம் 19ம் நாள் புதன் கிழமை ஜூலை 3 ராசிபலன்கள் அதிர்ஷ்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News